என்றுமே அமைதியை விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்; பெர்லினில் அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம்

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அமைதியை விரும்புபவர்கள், சட்டத்தை மதித்து நடப்பவர்கள் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதத்துடன் கூறி உள்ளார்.

ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பெர்லினில் புலம்பெயர் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது;

இந்திய மக்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்றுமே அமைதியை விரும்புபவர்கள். அவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் வாழ்கின்றனர், குடும்பங்களையும் கவனித்துக் கொள்கின்றனர். இது அனைவருக்கும் நன்றாக தெரியும்.

அதனால் தான் எல்லா நாடுகளிலும் இந்தியர்கள் வரவேற்கப்படுகிறார்கள். காரணம், அவர்கள் ஒருபோதும் நாசவேலைகளிலோ, பொதுமக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் செயல்களிலோ ஈடுபடுவது இல்லை.

ஜெர்மனியில் நீங்கள் எந்தளவுக்கு மதிக்கப்படுகிறீர்கள், வரவேற்கப்படுகிறீர்கள் என்பது ஒரு முக்கியமான விஷயம். ஐரோப்பாவின் மற்ற பகுதிகளில் நடப்பது போல், நீங்கள் தெருக்களில் இறங்கி சமூகத்தில் குழப்பங்களை ஏற்படுத்துவது இல்லை.

இவ்வாறு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.

Source link