வெறும் காலில் ஓடி வைரலான பெண்: ஊர்க்காவல் படையில் சேரும் தேர்வில் தோற்றதால் சோகம்

— நமது நிருபர்-

ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் கவிதா குமாரி. கணவரை இழந்தவர். வறுமையில் வாடுகிறார். மாமனார், மாமியார், இரு குழந்தைகளை காக்கும் பொறுப்பு அவர் மீது விழுந்தது. குடும்பத்தை காப்பதற்காக ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பித்தார்.

சில நாட்களுக்கு முன், சிதோ கன்ஹூ மாவட்ட மைதானத்தில் அகாடமி ஒன்று நடத்திய பயிற்சி ஓட்டத்தில் பங்கேற்றார். டிராக் சூட், ஷூ இல்லாமல் வெறும் காலில் ஓடினார். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இதைப்பார்த்து அவருக்கு உதவி செய்ய பலரும் முன்வந்தனர்.

இந்நிலையில், ஊர்க்காவல் படையில் சேர்வதற்காக 1,600 மீட்டர் தூரத்திற்கான ஓட்டப்போட்டி ராம்கர் மாவட்டத்தில் நடந்தது. பந்தய தூரத்தை கடக்க 10 நிமிடம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கவிதா 8 நிமிடம் 57 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து அத்தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

அடுத்த கட்டமாக, உயரம் தாண்டுதலில் பங்கேற்றார். ஆனால், மூன்று வாய்ப்பு வழங்கியும் குறிப்பிட்ட தூரத்தை அவரால் கடக்க முடியவில்லை. இதனால், இந்தத் தேர்வில் அவர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். அவரது ஊர்க்காவல் படையில் சேரும் கனவு இந்த முறை தகர்ந்தது. சோகத்துடன் அவர் வெளியேறியதை அறிந்து பலரும் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர்

Source link