மீண்டும் தாய்நாடு திரும்பினார் மச்சோடா!

வெனிசுலா எதிர்க்கட்சி,தலைவராக இருப்பவர் மரியா கொரினா மச்சோடோ. ஜனநாயகத்தை மீட்க போராடியதாக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த விருதை மச்சோடா நேரில் சென்று பெறவில்லை. அவரின் மகள்தான் பெற்றுக் கொண்டார். பின்னர் இந்த விருதை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மச்சோடா வழங்கினார்.

தற்போது ஓராண்டுக்கு பின்னர் மச்சோடா மீண்டும் தமது தாய்நாடான வெனிசுலாவுக்கு திரும்பி உள்ளார். இந்த விவரத்தை அவர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில் வெனிசுலாவில் ஒன்றாக, சுதந்திரத்திற்காக வந்திருப்பதாக குறிப்பிட்டு, தனது காரை சூழ்ந்து கொண்டு மக்கள் வெனிசுலா கொடிகளை அசைத்தபடி பின் தொடர்ந்த வாகன அணிவகுப்பு வீடியோ ஒன்றையும் அதில் இணைத்துள்ளார்.

அமெரிக்காவின் மத்தியஸ்த பேச்சுகள் ஒரு பக்கம் இருந்த சூழலில், மச்சோடா எங்கே இருக்கிறார் என்று தமக்கு தெரியாது என்று அதிபர் டிரம்ப் கூறி இருந்தார். அவர் எனக்கு நோபல் பரிசு வழங்கினார். அவர் பாதுகாப்பாக இருப்பார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link