செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் அனிதா சம்பத். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அனிதா சம்பத், பிரபா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரும் ஊகத் துறையில் தான் பணியாற்றி வருகிறார். அனிதா சம்பத் தற்போது சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் சில படங்களிலும் நடித்து வருகின்றார்.
வாட்டர் பாட்டிலை விட பெட்ரோல் விலை கம்மி; இந்தியர்களுக்கு ரெட் கார்பெட் விரிக்கும் குட்டி நாடு: ஆனா ஈரான் இல்ல
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத் அழகு குறிப்புகள், சமூக கருத்துகளை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து அனிதா சம்பத் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில், ”பெண்களை பெண்களே மோசமாக பேசுறது சில சென்சிடிவ்வானவர்களுக்கு எந்த அளவிற்கு வேதனையை கொடுக்கும் என்றுதான் நான் இன்னைக்கு பேச போறேன்.
சமூக வலைதளத்தில் எனக்கு ஒரு பெண் தொடர்ந்து கமெண்ட் செய்து கொண்டிருந்தார் என்று அவருடைய ப்ரோபைலை செக் பண்ணி பார்த்தேன். அதில் அவர் சிங்கிள் மதர் என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது நான் அவரிடம் நீ சிங்கிள் மதராக குழந்தையை வளர்க்கிறாய் அது சந்தோஷம், ஆனால் அந்த குழந்தையை நல்லபடியாக வளர்த்து எடு என்று கமெண்ட் செய்திருந்தேன்.
அதற்கு அந்த பெண், “அட்லீஸ்ட் நான் ஒரு அம்மா” என்று கமெண்ட் செய்திருக்கிறார். அவர் இதை எதற்கு சொல்கிறார் என்று தெரிகிறதா? அவர் அம்மாவாக இருக்கிறாராம் நான் அம்மா ஆகவில்லை என்பதை குத்தி காட்டுகிறார். எங்க தெருவுல ஒரு நாய் இருக்கிறது அந்த நாய் எப்போதும் பாய் பிரண்டோட மேட்டர் பண்ணி, குட்டி போட்டுக்கிட்டு இருக்கு. சமீபத்தில் கூட ஒரு பொண்ணு பிரியாணி கடைகாரனுக்காக தன்னுடைய குழந்தைகளை கொன்று விட்டார். ஜெயில்ல அவளை வைத்து கும்பிட்டார்களா?
இந்த உலகத்தில் பெண்ணாக இருந்து வாழ்வதே பெரிய விஷயம். இந்த மாதிரி பொம்பளைங்கள தாண்டி வாழ்கிறோம் அல்லவா இதற்காகவே பெரிய கிளாப் கொடுக்கலாம். எல்லா பெண்களும் அன்புக்குரியவர்கள் தான். ஆனால், உன்னை போன்று கேவலமாக அடுத்தவர்களை மிதிக்கிறார்கள் அல்லவா இப்படிதான் பொம்பளைங்க வாழக் கூடாது.
அம்மா ஆக வேண்டும் என்றால் பல டிகிரி முடித்து, நிறையபேருக்கு உதவி செய்து பெரிய வேலையில் இருந்தால்தான் அம்மா ஆக முடியும் என்றால் அதை சாதனையாக பேசலாம். அப்படி எதும் தேவையில்லையே. தாய்மை என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையை முழுமையாக்கும் என்பது எல்லாம் அந்த காலத்து பேச்சு. அப்படி எல்லாம் எதுவுமே இல்லை. உங்க மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ்வது தான் உங்கள் வாழ்க்கையை முழுமையாக்கும்” என்றார்.
