சபரிமலை ஆன்லைன் புக்கிங் வரும் 29ல் தொடக்கம்

சபரிமலை: கேரளாவின் சபரிமலைஅய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கான, ‘ஆன்லைன்’ முன்பதிவு வரும் 29-ல் தொடங்குகிறது.

சபரிமலையில் கூட்டத்தை ஒழுங்கபடுத்த, ‘ஆன்லைன்’ முன்பதிவு மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலம் நவ., 16-ல் தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு வரும் 29 காலை 10:00 மணிக்கு தொடங்கும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.

பக்தர்கள், www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். நிலக்கல்- பம்பை பாதை வழியாக தினமும் 60 ஆயிரம் பேருக்கும், எருமேலி, பெருவழிப் பாதை மற்றும் வண்டிப்பெரியாறு, சத்திரம் பாதையில் தலா 3,000 பேருக்கும் தினமும் அனுமதி வழங்கப்படும். நிலக்கல், எருமேலி வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில், ‘ஸ்பாட் புக்கிங்’ வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Source link