ஜலந்தர்: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பஞ்சாப்பில் உள்ள ஜலந்தரில் இன்று தொடங்குகிறது.
இதில் 5 முறை சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
முன்னதாக பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மலேசியா – சீனா அணிகளும், 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜப்பான் – தென் கொரியா அணிகளும் மோதுகின்றன.
பஞ்சாப்பில் 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் சர்வதேச ஹாக்கி தொடர் நடத்தப்படுகிறது. கடைசியாக இங்கு 2009-ம் ஆண்டு கோல்டு கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று இருந்தது.
