இன்று (அக்டோபர் 27) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.400 உயர்ந்து ரூ.1,05,080-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.220-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த வாரத் தொடக்கத்தில் உயர்ந்து, பின் சரிந்தது. அதேபோல் இந்த வாரத்திலும் தொடக்க நாளான நேற்று தங்கத்தின் விலை உயர்ந்தது. இதனால் கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,150 டாலருக்கும் கீழே சரிந்துள்ளது. இதன் தாக்கம் தான் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் தங்கத்தின் விலை 3,250 டாலராக சரிய வாய்ப்புள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் நடந்தால் இந்திய சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.98,000-க்கு வர வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே குறையும் என்ற நடுத்தர மக்களின் நம்பிக்கை, இப்போது மெல்ல மெல்ல துளிர் விட்டுள்ளது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்:
நேற்று (அக்டோபர் 26) தங்கம் 1 கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.13,085-க்கும், ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.220-க்கு விற்பனையானது
