அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலையில் பல்வேறு மாற்றங்கள் காணப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகைப் பிரியர்களைக் கவலை அடையச் செய்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்:
நேற்றைய தினத்தைத் தொடர்ந்து, இன்றும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.13,085-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,135 என்ற விலையிலும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,05,080 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கமான 18 காரட் விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,750 க்கும், சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு சவரன் ரூ.86,000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
தங்கம் விலையில் தொடர் ஏற்றம் காணப்பட்டாலும், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும்மின்றி நிலையாக நீடிக்கிறது.
நேற்றைய விலையின்படியே, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.220-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,20,000-க்கும் எந்தவித விலை மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சாமானிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தங்கம் வாங்குவோர் விலை நிலவரத்தை நன்கு கவனித்து அதற்கேற்ப திட்டமிடுவது நல்லது.
