கட்சி தாவுவலை தடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு மற்றும் தோ்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தோ்தலுக்குப் பிறகு, 6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் கட்சியான தவெகவில் இணைந்தனா்.
இதையடுத்து கட்சி தாவலை தடுக்க கோரி வழக்கறிஞா் கே. சுதன் என்பவர் சென்னை உயா் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
மனு
அவர் தன் மனுவில், தோ்தல் முடிந்த சில வாரங்களிலேயே ஒரு மக்கள் பிரதிநிதி வேறொரு அரசியல் கட்சிக்கு மாறுவது என்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து. இதனால் நடத்தப்படும் இடைத்தோ்தல்கள், பொது நிதி தேவையற்ற முறையில் செலவாகிறது.
எனவே தாமாக முன்வந்து ராஜினாமா செய்யும் எம்.பி, எம்எல்ஏக்கள், இடைத்தோ்தலை நடத்துவதற்கு தேவைப்படும் பொது நிதிக்கு இணையான தொகையைச் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்த வேண்டும்.
முன்கூட்டியே ராஜினாமா செய்யும் எம்.பி, எம்எல்ஏக்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற தோ்தல்களிலோ, சட்டமன்ற தோ்தல்களிலோ போட்டியிட முடியாதபடி தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என கோரியிருந்தார்.
உயர்நீதிமன்றம்
இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஒரு பிரதிநிதி தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது.
புதிய தகுதி நீக்க விதிகளையோ அபராதங்களையோ நீதிமன்றம் தானாக உருவாக்க முடியாது. இத்தகைய விதிகளை மாற்றுவது நாடாளுமன்றத்தின் கொள்கை முடிவுக்கு உட்பட்ட விஷயம் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றம்
அதனை எதிா்த்து செப்டம்பரில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இடைத்தோ்தல்களுக்கான செலவின விவரங்களையும் வழக்கில் சோ்க்க வேண்டியிருப்பதால், வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க மனுதாரா் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் மத்திய அரசு, இந்தியத் தோ்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்ற செயலாளா், தமிழ்நாடு தலைமைச் செயலாளா் மற்றும் அதிமுகவில் இருந்து தாவிய 6 பேருக்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை நவம்பா் 16 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.
