IND vs NZ Live Score, 3rd T20I: தொடக்க ஜோடியை உடைத்த இந்தியா

India Vs New Zealand LIVE Score, 3rd T20I: நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒரு நாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடந்து வருகிறது. இதன்படி, கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் மற்றும் 2-வது டி20 ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து இடையிலான 3-வது டி-20 போட்டி நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் உள்ள ஹென்றி மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற இந்தியா பவுலிங் 

இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, நியூசிலாந்து அணி மட்டையைச் சுழற்றி வருகிறது. 

Source link