பள்ளிக் கல்வித் துறை தொடர்பான முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கரூர் கூட்டநெரிசல் சம்பவம் நடந்த நாளில் அன்பில் மகேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலித்த வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி மாலையில் த.வெ.க தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் மேற்கொண்ட பரப்புரை கூட்டத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்தக் கூட்டநெரிசல் சம்பவத்திற்குப் பின் விஜய் ‘இதயம் நொறுங்கிபோயிருக்கிறேன்’ என தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து வீடியோ வெளியிட்டு தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சென்னைக்கு வரவழைத்து, அவர்களிடம் கண்ணீர் விட்டு ஆறுதல் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், தற்போது செப்டம்பர் 27 ஆம் தேதி அன்பில் மகேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, கடந்த ஆண்டு இதே தேதியில் விஜய் கண்ணீர் வடித்தார், தற்போது அதே தேதியில் அன்பில் மகேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
27 Oct 2025: Thalapathy Vijay met families of Karur stampede victims
27 Oct 2026: #AnbilMahesh sent to 15 days custody over a ₹400 Crore corruption scam!
Exactly 1 year apart. What goes around comes around! 🙏 pic.twitter.com/SO6frfeEyH
— George (@georgeviews) October 26, 2026
இதற்கிடையில், புழல் சிறை வாசலில் அன்பில் மகேஷ் ஆதரவாளர்கள் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு ஆதரவாளர், தலைவரே அன்னைக்கே கரூர்ல அவன போட்டு இருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா? கரூரிலே நாம பண்ணி இருக்கனும் என்று ஆவேசமாக கேட்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
