உலகில் நாளுக்கு நாள் நகர்ப்புறப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், பூமிக்கு அடியில் இயங்கும் சுரங்கப் பாதை ரயில் சேவைகளும் பயணிகளுக்கு பல நேரங்களில் பெரும் சித்திரவதையாகவே மாறி வருகின்றன. அதிகப்படியான கூட்ட நெரிசல், சுத்தம் இல்லாத பெட்டிகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் காரணமாக பயணிகளால் ‘உலகின் மோசமான சப்வே ரயில்கள்’ என விமர்சிக்கப்படும் முக்கிய 4 ரயில் சேவைகள் குறித்து பார்க்கலாம்.
விரல் ரேகை, ஃபேஸ் ஸ்கேன்; விசாவுக்கு வச்சான் பாரு ஆப்பு: இந்தியர்கள் தலையில் இடியை இறக்கிய ஆஸ்திரேலியா
லண்டனின் நார்தர்ன் மற்றும் சென்ட்ரல் லைன்கள்
லண்டன் சப்வே ரயிலில் நாள்தோறும் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணிக்கின்றனர். ஆனால், இதில் உள்ள நார்தர்ன் மற்றும் சென்ட்ரல் லைன்கள் மிகவும் அசுத்தமானவை எனப் பயணிகள் கொந்தளித்துள்ளனர். 2023 முதல் 2026 வரையிலான புகார்களில் பாதிக்கும் மேல் இந்த இரு பாதைகள் மீதே பதிவாகியுள்ளன. “ரயில் இருக்கைகளைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது, அவ்வளவு அசுத்தம்” எனப் பயணிகள் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.
புடாபெஸ்ட் மெட்ரோ, ஹங்கேரி
ஐரோப்பாவிலேயே மிகவும் மோசமான மெட்ரோ சேவைகளில் ஒன்றாக புடாபெஸ்ட் மெட்ரோ தேர்வாகியுள்ளது. ஆண்டிற்கு சுமார் 38.2 கோடி பயணிகள் பயன்படுத்தும் இந்த அமைப்பில் வெறும் 48 ஸ்டேஷன்கள் மட்டுமே உள்ளதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இணையதளங்களில் இந்த மெட்ரோ சேவையைப் பற்றி வரும் செய்திகளுக்கு 75% பயணிகள் எதிர்மறையான கருத்துகளையே தெரிவித்து வருகின்றனர்.
நியூயார்க் சப்வேயின் லெக்சிங்டன் அவென்யூ லைன்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லெக்சிங்டன் அவென்யூ (Lexington Avenue) வழியே செல்லும் 4, 5 மற்றும் 6 எண் கொண்ட சப்வே பாதைகள் குற்றச் சம்பவங்களின் மையமாக மாறியுள்ளன. வன்முறை குற்றங்கள் அதிகம் நடக்கும் ஸ்டேஷன்கள் இந்தப் பாதையில்தான் அமைந்துள்ளன. அதுமட்டுமின்றி, பீக் ஹவர்ஸில் மூச்சு முட்டும் அளவுக்கு கூட்டம் அலைமோதுவதால் பயணிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.
டோக்கியோ மெட்ரோ, ஜப்பான்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மெட்ரோ ரயில் தூய்மையாக இருந்தாலும், அதன் நெரிசல் பயணிகளை மிரள வைக்கிறது. “டப்பாவிற்குள் அடைக்கப்பட்ட சர்தார் மீன்களைப் போல மனிதர்கள் நெருக்கி அடிக்கப்படுகிறார்கள். பிரேக் பிடித்தால் கூட நகர முடியாத அளவுக்கு அங்கே கூட்டம் இருக்கும்” என சுற்றுலாப் பயணிகள் தங்களது அனுபவங்களை அதிர்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர்.
