தொடர் மழையால் கொப்பரை உற்பத்தி பாதிப்பு: பொள்ளாச்சி பகுதியில் ஒரு லட்சம் பேர் வேலை இழப்பு

பொள்ளாச்சி: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்​துள்​ளதால் கொப்பரை உற்பத்தி பாதிக்​கப்​பட்டு சுமார் ஒரு லட்சத்​துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்​ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சுல்தான்​பேட்டை, ஆனைமலை, கிணத்​துக்​கடவு, கோட்டூர், நெகமம் உள்ளிட்ட பகுதி​களில் சுமார் 3 கோடி தென்னை மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் பறிக்​கப்​படும் தேங்காய்கள் மூலம் கொப்பரை உற்பத்தி செய்யப்​படு​கிறது.

இந்நிலை​யில், கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி சுற்று​வட்டார பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் நெகமம் பகுதியில் கொப்பரைகளை உலர வைக்க தேவையான வெயில் கிடைக்​க​வில்லை.

இதன் காரணமாக 2 ஆயிரத்​துக்கும் மேற்பட்ட கொப்பரை உற்பத்தி களங்களில் உற்பத்தி அடியோடு பாதிக்​கப்​பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக கொப்பரை உற்பத்​திக்கு பயன்படுத்​தப்​படும் தேங்காய்கள் ஆங்காங்கே களங்களில், தோப்பு​களில் தேங்கி உள்ளன.

சில இடங்களில் மழையில் நனையாமல் இருக்க கொப்பரைகளை தார்பாய் போட்டு மூடி வைத்துள்​ளனர். இது குறித்து தென்னை விவசா​யிகள் கூறிய​தாவது: பருவமழை காரணமாக கொப்பரை உற்பத்தி பாதிக்​கப்​பட்​டுள்ள நிலையில், கொப்பரைக்கு வெளிமார்க்​கெட்டில் எதிர்​பார்த்த விலையும் இல்லை. மழையால் பல இடங்களில் கொப்பரை உற்பத்தி களங்கள் தற்காலிகமாக மூடப்​பட்டு உள்ளன.

இதனால் வேலைவாய்ப்பு குறைந்து தொழிலா​ளர்கள் ஏராளமானோர் சொந்த ஊருக்கு புறப்​பட்டு செல்ல தொடங்​கி​விட்​டனர். தேங்காய் பறிப்​பவர்கள், தேங்காயை எடுத்து வாகனங்​களில் ஏற்று​பவர்கள், தேங்காய்களை உடைத்து கொப்பரைக்காக காய போடுபவர்கள், உற்பத்தி செய்யப்பட்ட கொப்பரைகளை மூடைகளில் நிரப்​புபவர்கள் என நேரடி​யாக​வும், மறைமுக​மாகவும் சுமார் 1 லட்சம் பேர் தற்காலிகமாக வேலை இழந்துள்​ளனர்.

தோப்பு​களில் பல கோடி ரூபாய் மதிப்​பிலான தேங்காய்கள் தேங்கிக் கிடக்​கின்றன. எனவே, அரசு மழைக்கால நிவாரண தொகை வழங்க முன்வர வேண்​டும். இவ்வாறு அவர்கள்​ கூறினர்.

Source link