பெங்களூர்: கர்நாடகாவில் 129 நாட்களாக நடந்து வந்த வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை முழுவதுமாக முடிவடைந்த நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 99.32 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதால் மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4.55 கோடியாக சரிந்துள்ளது. உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பதை செக் செய்வது எப்படி? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கர்நாடகாவில் SIR எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை பணி கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி தொடங்கியது. பிஎல்ஓ எனும் வாக்குச்சாவடி முகவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான விண்ணப்பம் வழங்கினர்.
இந்த படிவங்களை பொதுமக்கள் நிரப்பி வழங்கினர். இதில் இறந்தவர்கள், இரட்டை வாக்குரிமை, இடமாறியவர்கள் என பல லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. ஆகஸ்ட் மாதம் 17 ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் மொத்தம் 4.46 கோடி பேரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தனர். 1.08 கோடி பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு இருந்தது. அதன்பிறகு ஆட்சேபனைகளை தெரிவிக்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் காலஅவகாசம் வழங்கப்பட்டது.
129 நாட்களாக நடந்து வந்த ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி’ முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதையடுத்து இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 99.32 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு முன்பாக மொத்தம் 5.54 கோடி பேர் வாக்காளர்களாக இருந்தனர். தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்த நிலையில் மொத்தம் 99.32 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.54 கோடியில் இருந்து 4.55 கோடியாக சரிந்துள்ளது. இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் தான் மாநிலத்தில் அதிகம் உள்ளனர். அதன்படி மொத்தம் 2.29 கோடி பெண் வாக்காளர்களும், 2.25 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
