ஸ்டாலினுக்கு என்னுடைய கேள்வி இது தான்; அமைச்சர் ஆதவ் பேட்டி

சென்னையில் அமைச்சர் ஆதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி; முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு யாரையும் கைது செய்ய வேண்டும், பழிவாங்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. 1977க்கு பிறகு மிகப்பெரிய தேர்தல் வெற்றியை மக்கள் கொடுத்து இருக்கிறார்கள்.

ஊழலற்ற நிர்வாகத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் பிரசாரமாக இருந்தது. தவறு செய்தவர்களை விட மாட்டோம். மக்கள் முன் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று சட்டசபையில் முதல்வர் விஜய் கூறிய போது உதயநிதி கேலி ஆகவும், கிண்டலாகவும் ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள் என்று கூறினார்.

ஸ்டாலினுக்கு என்னுடைய ஒரே கேள்வி, அரசு பள்ளியில் படித்த மாணவன் என்கிற முறையில் இருந்து கேள்வி கேட்கிறேன்.

அவரது மகன்களையோ, பேரப் பிள்ளைகளையோ அரசு பள்ளிக்கு அனுப்பியது கிடையாது.

அவர் பார்த்தாரோ என்று கூட தெரியாது. நான் படிக்கும்போதே அரசு பள்ளி கட்டடம் மழையில் இடிந்து விழுந்து மரத்தடியில் இருந்து படித்தவன் நான். எங்களுக்கு அரசு பள்ளி கட்டடங்கள் நிலை என்ன? பிரச்னை என்ன என்று தெரியும்.

திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத் துறை, பள்ளிகளுக்கு சான்றிதழ் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. வளமான துறைகளை தேர்ந்தெடுத்து பணம் எடுப்பதே நோக்கமாக இருந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் ஆதவ் கூறினார்.

Source link