நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம், வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் வெறும் 11 நாட்களில் தமிழ் சினிமாவில் மிக அதிக வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வரும ரஜினிகாந்த் தனது படங்கள் வெளியாகும்போது தான் பாக்ஸ்ஆபீஸ் கிங் என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார். அந்த வரிசையில், தற்போ இவரது நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம், வெளியான 11 நாட்களில் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் ரூ700 கோடியை கடந்து தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த முல் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
ஜெயிலர் 2 படத்திற்கு முன்பு, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ஒன்றா இருந்து. தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டு, ‘ஜெயிலர் 2’ திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும், கடந்த 27 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் ஏழு ‘இண்டஸ்ட்ரி ஹிட்’ படங்களை கொடுத்துள்ளது. இந்த 7 படங்களுமே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தான்.
கடந்த 1999-ஆம் ஆண்டு, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ மாபெரும் வெற்றிப் படமானது. இந்த படம் 1996-ல் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான இந்தமியன் படத்தின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்தது.இதனைத் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2005-ம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் பெரிய வசூல் வேட்டை நடத்தி படையப்பா படத்தின் சாதனையை முறியடித்து முதலித்தை பிடித்தது.
சந்திரமுகி திரைப்படம் 1993-ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற ‘மணிசித்ரதாழு’ (1993) என்ற திகில்-நகைச்சுவைப் படத்தின் ரீமேக் ஆகும். சந்திரமுகி திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு அதிக வசூல் செய்த படமாக முதலிடத்தில் இருந்த நிலையில், 2007-ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மெகா பிளாக்பஸ்டர் படமான ‘சிவாஜி: தி பாஸ்’ இதன் சாதனையை முறியடித்தது. ‘சிவாஜி: தி பாஸ்’ வெளியாகி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ரஜினிகாந்த் நடிப்பில் மீண்டும் ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்’ திரைப்படம் 2010-ம் ஆண்டு வெளியாகி அதிக வசூலை குறித்து முதலிடத்தை பிடித்தது.
‘எந்திரன்’ படத்தின் ஆல்-டைம் சாதனையை 2016-ல் ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய ‘கபாலி’ திரைப்படம் முறியடித்தது. இதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு எந்திரன் படத்தின் 2-ம் பாகமாக வெளியான 2.0 திரைப்படம், அதிக வசூல் செய்த திரைப்படமாக சாதனை படைத்தது. அதன்பிறகு வேறு எந்த படங்களும் இந்த சாதனையை எட்ட தவறிய நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்தே 2.0 படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளார்.
ஜெயிலர் 2 திரைப்படம் இதுவரை தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ள நிலையில், இந்த படம் 12 நாட்களில் ரூ730 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, ஜெயிலர் படத்தின் முதல் பாகம் 600 கோடிக்கு அதிகமாக வசூலித்த நிலையில், ஜெயிலர் 2 முதல் பாக வசூலுடன் சேர்த்து 8 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த 2.0 படத்தின் வசூலையும் முறியடித்துள்ளது, இந்த படத்தின் வசூல் ரூ800 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 27 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் ‘இண்டஸ்ட்ரி ஹிட்’ படங்களின் பட்டியலில், 1999-ம் ஆண்டு வெளியான படையப்பா ரூ60.40 கோடி வசூலித்து கமல்ஹாசனின் ‘இந்தியன்’ சாதனையை முறியடித்தது. 2005-ம் ஆண்டு வெளியான சந்திரமுகி ரூ89.10 கோடி (ரஜினிகாந்தின் ‘படையப்பா’ சாதனையை முறியடித்தது. 2007-ம் ஆண்டு வெளியான சிவாஜி: தி பாஸ் ரூ152 கோடி வசூலித்து ‘சந்திரமுகி’ சாதனையை முறியடித்தது.
2010-ம் ஆண்டு வெளியான எந்திரன் திரைப்படம் ரூ293.10 கோடி வசூலிதர்து ‘சிவாஜி’ சாதனையை முறியடித்தது. தொடர்ந்து 2016-ம் ஆண்டு வெளியான கபாலி திரைப்படம் ரூ305 கோடி ‘எந்திரன்’ சாதனையை முறியடித்தது. 2018-ம் ஆண்டு வெளியான 2.0 திரைப்படம் ரூ619 கோடி வசூலித்து ‘கபாலி’ சாதனையை முறியடித்தது. 2026-ம் ஆண்டு ஜெயிலர் 2 (2026) – 12 நாட்களில் ₹733 கோடி ‘2.0’ சாதனையை முறியடித்துள்ளது.
கடந்த 27 ஆண்டுகளில், தமிழ் சினிமா ஏழு ‘இண்டஸ்ட்ரி ஹிட்’ படங்களைக் கண்டுள்ளது. அவை அனைத்தும் 75 வயதிலும் சாதனைகளை முறியடித்து பாக்ஸ் ஆபீஸில் பிரம்மாண்ட அலையை உருவாக்கி வரும் ரஜினிகாந்திற்கு மட்டுமே சொந்தமானவை. தீபாவளி வரை போட்டிக்கு படங்கள் எதுவும் இல்லாததால், ஜெயிலர் 2 திரைப்படம், ரூ1000 கோடி வசூலை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
