புதுடில்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, தனது நினைவுகள் மற்றும் வாழ்வியல் பதிவுகள் அடங்கிய,” பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆப் லைப்’ என்ற சுயசரிதை புத்தகத்தை எழுதி உள்ளார். இப்புத்தகம் நவம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் சமூக ஊடகத்தில் இணைந்தார். அதில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
வீடியோவில் அவர்” கணவர் ராஜிவை பிரதமர் ஆக பதவியேற்க வேண்டும் என சொன்ன போது, அதற்கு நான் எதிராக இருந்தேன்,” எனக்குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், தனது சுயசரிதையை எழுதியதற்கான காரணத்தை விளக்கி உள்ளார்.
அதில்,” எனது மீதான கண்ணோட்டத்தை சிலர் மாற்றிக் கொள்வர். சிலரின் கண்ணோட்டம் இன்னும் மோசமாகும். அது காரணமல்ல. ஆனால், நீங்கள் ஒரு புத்தகத்தை எழுதும்போது அல்லது பொது வாழ்க்கையில் இருக்கும்போது அதுதான் நடக்கும்,” என்றார்.
