சென்னை,
ரஞ்சி டிராபி தொடரில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டடத்தில் ரெயில்வேஸ் அணி 126 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
தமிழ்நாடு – ரெயில்வேஸ்
2026-27 சீசனுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு – ரெயில்வேஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
184 ரன்களுக்கு சுருண்ட ரெயில்வேஸ்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ரெயில்வேஸ் அணி, தமிழ்நாடு பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 53.3 ஓவர்களில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தமிழ்நாடு அணியின் சார்பில் சோனு யாதவ், சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
165 ரன்களுக்கு ஆட்டமிழந்த தமிழ்நாடு
தொடர்ந்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய தமிழ்நாடு அணி, இரண்டாம் நாள் ஆட்டத்தில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாபா இந்திரஜித் அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்தார். இதனால் முதல் இன்னிங்சில் ரெயில்வேஸ் அணி 19 ரன்கள் முன்னிலை பெற்றது.
126 ரன்கள் முன்னிலையில் ரெயில்வேஸ்
இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ரெயில்வேஸ் அணி, தமிழ்நாடு பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 51 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.
இதன் மூலம் ரெயில்வேஸ் அணி 126 ரன்கள் முன்னிலையில் உள்ளது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி எஞ்சிய ஒரு விக்கெட்டை விரைவாக வீழ்த்தி, இலக்கை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
