ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41.50 கொள்முதல் செய்ய அரசு முடிவு

வெளிச்சந்தையில் ஒரு யூனிட்டுக்கு ரூ.41.50 க்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது. வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50 என்ற வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு வாங்கப்பட உள்ளது.

சுமார் 2,100 மெகாவாட் மின்சாரம் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வாங்கப்படுகிறது.2026 டிசம்பர் முதல் 2027 மே மாதம் வரை உள்ள காலகட்டத்தில், மாலை மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் மின் தேவையை சமாளிக்க இந்த மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிகரிக்கும் மின் தேவை

தமிழகத்தில் மின்சாரத்திற்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முந்தைய ஒப்பந்தங்களில் ஒரு யூனிட் ரூ.35 முதல் ரூ.37.50 வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது தேவை மேலும் அதிகரித்துள்ளதால் விலை ரூ.41.50 ஆக உயர்ந்துள்ளது.

தட்டுப்பாடற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யவும், மின்வெட்டைத் தவிர்க்கவும் இந்த அவசரகால குறுகிய கால மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசுக்கு எழுந்துள்ள எதிர்ப்புகள்

தமிழகத்தில் நிலவிய மின் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டைச் சமாளிக்க, ஏற்கனவே இதற்கு முன்னர் தமிழக அரசு வெளிச்சந்தையில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.31.99 முதல் ரூ.37 வரை (சராசரியாக ரூ.35) தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய எடுத்த முடிவிற்கு தமிழக அரசியலில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின

முந்தைய குறைந்த விலை ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, இந்தியாவின் மிக அதிக விலையான ரூ.35-க்கு மின்சாரம் வாங்கும் தவெக கூட்டணி அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தன , இந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு அரசியலில் கடும் விவாதப்பொருளாக கிளம்பியுள்ளது.

Source link