கைதிகள் தப்பியோடிய சம்பவம்: தமிழ்நாட்டை 27 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளியிருக்கிறது – அதிமுக

கைதிகள் தப்பியோட்டம்

தேனி மாவட்டம்தேக்கம்பட்டி கிளைச் சிறையிலிருந்து நள்ளிரவில் 17 விசாரணைக் கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதிகள் வலிப்பு வருவதுபோல் நடித்து ,சிறைக் காவலர் கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, கைதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து காவலர்களைக் கொடூரமாகத் தாக்கி 17 கைதிகளும் தப்பி சென்றுள்ளனர்.

இந்த பணியில் இருந்த சிறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தீவிர தேடுதல் வேட்டை மற்றும் ட்ரோன் உதவியுடன், பொட்டல் காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதுங்கியிருந்த 13 கைதிகள் இதுவரை காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மீதமுள்ள 4 கைதிகளைப் பிடிக்கத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் 27 ஆண்டுகள் கழித்து, தவெக ஆட்சியில் கைதிகள் சிறையில் இருந்து தப்பிக்கும் அவலமானது, தமிழ்நாட்டை 27 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளியிருக்கிறது த.வெ.க என்ற உண்மையையே உணர்த்துவதாக அதிமுக தெரிவித்துள்ளது.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அதிமுக குறிப்பிட்டுள்ளதாவது

தமிழ்நாடு கடைசியாகக் கண்ட மிகப்பெரிய சிறைத் துறை சட்டம் ஒழுங்கு என்பது 1999-ல் நடைபெற்ற சென்னை மத்திய சிறைக் கலவரம் தான்.

சிறையில் இருந்த பாக்சர் வடிவேலு என்ற ரவுடி உயிரிழந்த செய்தி கேட்டு கைதிகள் அரங்கேறிய மிகப்பெரிய கலவரத்தில் துணை ஜெயிலர் உயிரோடு எரிக்கப்பட்டதோடு, 9 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிறைத் துறை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்த சம்பவம் அது.

27 ஆண்டுகள் தமிழ்நாட்டை பின்னோக்கி தள்ளியுள்ளது

அதன் பிறகு 2001-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக , சிறைத் துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததன் விளைவாக, சிறைச்சாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.

தற்போது 27 ஆண்டுகள் கழித்து, தவெக ஆட்சியில் கைதிகள் சிறையில் இருந்து தப்பிக்கும் அவலமானது, தமிழ்நாட்டை 27 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளியிருக்கிறது த.வெ.க என்ற உண்மையையே உணர்த்துகிறது.

என்று தெரிவித்துள்ளது.

Source link