மும்பை: மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
மும்பை சத்ரபதி சர்வதேச விமான நிலையத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு புறப்பட தயாராக இருந்த இண்டிகோ,ஏர் இந்தியா விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
பயணிகள் எந்த நுழைவுவாயில்கள் வழியாக செல்ல வேண்டும் என்ற அறிவிப்புகள் அடிக்கடி மாற்றப்பட்டன. மேலும், விமானங்களின் இயக்கம் தொடர்பான அறிவிப்புகளிலும் முரண்பாடுகள் காணப்பட்டன.
இதனால் குழப்பம் அடைந்த பயணிகள் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமான சேவைகள் பாதிப்பால், அங்கு ஒரு குழப்பமான சூழ்நிலையே நிலவியது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது;
செவ்வாய்கிழமை மாலையில் மும்பை விமான நிலையத்தில தற்காலிகாக நெட்வெர்க் சேவைகளில் இடையூறு காணப்பட்டது. பயணிகளின் சிரமத்தை குறைக்கவும், விமான சேவைகளை சீர்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
