21 நாட்களாக குறைகிறது:  தொழிற்பேட்டை மனை ஒதுக்கும் காலக்கெடு

சென்னை: தமிழகத்தில், ‘சிட்கோ’ தொழிற்பேட்டைகளில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, தொழில் மனை ஒதுக்கீடு செய்வதற்கான அவகாசத்தை, 30 நாட்களுக்குப் பதில், 21 நாட்களாக குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுதும் உள்ள தொழிற்பேட்டைகளில் மனை ஒதுக்கீடு செய்ய தொழில்முனைவோரிடம் இருந்து விண்ணப்பங்களை சிட்கோ பெறுகிறது.

பிறகு, விண்ணப்ப தாரர்களிடம் நேர்காணல் நடத்தி, அதில் தேர்வானவர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்து, 30 நாட்களுக்குள் மனை ஒதுக்க காலக்கெடு உள்ளது. இதை தற்போது, 21 நாட்களாக குறைக்க, அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பெரிய தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங் க தேவைப்படும் அனைத்து அனுமதிகளையும், 21 நாட்களுக்குள் வழங்க சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இதற்காக விண் ணப்பம் பெற, ஒற்றைச்சாளர இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த சீர்திருத்தம் வாயிலாக, தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தொழில் பூங்காக்களில் நிலம் ஒதுக்கீடு பெற தொழில்முனைவோர் விண்ணப்பித்து, தேர்வான நாளில் இருந்து, 21 நாட்களுக்குள் மனை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

பெரி ய நிறுவனங்களுக்கே இந்த சலுகை அளிக்கும் போது, சிறு, குறு நிறுவனங்களுக்கான தொழிற்பேட்டைகளிலும், 21 நாட்களுக்குள் மனை ஒதுக்கீடு செய்ய சிட்கோவிடம் தெரிவித்து, அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் வாயிலாக, தமிழகத்தில் தொழில் துவங்குவதற்கு ஆகும் நாட்கள் வெகுவாக குறைந்து, அதிக அளவில் புதிய தொழில்கள் துவங்கப்பட வாய்ப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

“பெரிய நிறுவனங்களுக்கே இந்த சலுகை அளிக்கும் போது, சிறு, குறு நிறுவனங் களுக்கான தொழிற்பேட்டைகளிலும், 21 நாட்களுக்குள் மனை ஒதுக்கீடு செய்ய சிட்கோவிடம் தெரிவித்து, அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்”

Source link