மின்தடை அறிவிப்பு; அக்டோபர் 28 இந்த பகுதிகளில் பவர் கட்: லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா? செக் பண்ணுங்க

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில், தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும் மற்றும் மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தொடர்ந்து பல்வேறு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இன்று (அக்டோபர் 28) தமிழகத்தில் உள்ள பல முக்கிய மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

எனவே, பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. 

கோயம்புத்தூர் 

காரையம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி. புதூர், கைகோளம்பாளையம் மற்றும் வெங்கட்டாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

கரூர் 

ஜெகதாபி, பாலப்பட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியப்பட்டி, சுண்டுக்குழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவணை வடக்கு, மேலப்பகுதி, சி.புதூர் மற்றும் விராலிப்பட்டி ஆகிய பகுதிகள் மின்தடையால் பாதிக்கப்படும்.

பெரம்பலூர் 

பெரியசாமி கோவில், பூஞ்சோலை, வேப்படி, கடம்பூர் மற்றும் விஜயபுரம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்.

தஞ்சாவூர் 

மடுக்கூர், தமரங்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நாளை மின்தடை அமலில் இருக்கும்.

தேனி 

தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின் விநியோகம் தடைபடும்.

திருப்பத்தூர் 

வாணியம்பாடி, அம்பலூர், கொத்தக்கோட்டை, கேத்தாண்டப்பட்டி, ஏலகிரி, மிட்டூர், பாலப்பநத்தம், லாலாபேட்டை, உம்மக்குப்பம், காவலூர், ஆலங்காயம், ஜவ்வாது மலை, இருணாப்பட்டு, பூங்குளம், நிம்மியம்பட்டு, சர்க்கரை ஆலை பகுதி, கோடையஞ்சி, ரமணநாயக்கன்பேட்டை, மங்கலம், திம்மம்பேட்டை, பள்ளத்தூர், மல்லங்குப்பம், நாராயணபுரம் மற்றும் தும்பேரி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.

விழுப்புரம் 

மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், கந்தாடு, வட அகரம், திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீழ்பேட்டை, அனுமந்தை, முருக்கேரி, கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கீழருங்குணம், கீழ்சீவிரி, அவணிப்பூர், பாங்கொளத்தூர், ஆண்டப்பட்டு, ஆச்சிப்பாக்கம் மற்றும் கருவாப்பாக்கம் ஆகியப் பகுதிகளில் நாளை மின் விநியோகம் முழுமையாகப் பாதிக்கப்படும்.

மேற்கண்ட பகுதிகளில் வசதி செய்யும் வகையில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் சீரான முறையில் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் தங்களது தினசரிப் பணிகளை அதற்கேற்பத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Source link