மாஜி அமைச்சர் மகேஷ் லஞ்ச வழக்கில் அடுத்த ரெய்டு: யார் அந்த சண்முகப்பிரியா?

சென்னை: திமுக ஆட்சியின் போது, அரசு அனுமதியைப் பெற தனியார் பள்ளிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் மேல் லஞ்சப் பெற்றதாக புகார் எழுந்தது. திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ், திமுக நிர்வாகி அரச குமார், முத்துக்குமாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணையும் நடந்து வருகிறது.

ஏற்கனவே, அரசகுமார், முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், அரசகுமார், ஜாமினியில் வெளியே வந்துள்ளார். 26ம் தேதி மாலை மகேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேகிக்கப்படும் நபர்களிடம் விசாரணையும், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. இன்று சென்னை பெருங்குடியில் வசிக்கும் சண்முக பிரியா என்பவர் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் கைது செய்யப்பட்ட மாஜி அமைச்சர் மகேஷுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Source link