மின்னகத்தில் ஏஐ தொழில்நுட்பம்: மின்வாரியம் சார்பில் 5 ஆண்டுகளுக்கு டெண்டர் அறிவிப்பு

Summary

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் புதிய கட்டுப்பாட்டு மையத்தை அமைக்க டெண்டர் அறிவித்துள்ளது. மின்சார புகார்களை விரைவாக கையாளவும், சேவைகளை ஒருங்கிணைக்கவும் இந்த மையம் உதவுகிறது. முன்வைப்புத் தொகை ரூ.11.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மின்சார நுகர்வோர் அளிக்கும் புகார்களை விரைவாகக் கையாளவும், மின்வாரியத்தின் சேவைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கவும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கட்டுப்பாட்டு மையத்தை அமைக்கத் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் டெண்டர் அறிவித்துள்ளது.

முன்வைப்புத் தொகை

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமையகத்தின் மின்னகம் மையத்தில் இந்தக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தின் மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்களைக் கண்காணிப்பது, சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்படும் புகார்களை நிர்வகிப்பது, வாட்ஸ்அப் மூலம் களப்பணித் தகவல்களை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், மின்பாதைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் வசதியும், பொதுமக்கள் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதியும் இந்தத் திட்டத்தில் இடம்பெற உள்ளன.

இந்தப் பணிகளை மேற்கொள்ளத் தகுதியுள்ள நிறுவனங்கள் தொழில்நுட்பம் மற்றும் விலை தொடர்பான ஆவணங்களைத் தனித்தனியாகச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இதற்கான முன்வைப்புத் தொகை ரூ.11.70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Source link