'என் தங்கமே…' மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண், தங்களின் நான்காம் ஆண்டு திருமண நாளைத் தனது மனைவியுடன் இணைந்து மிகச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான நெகிழ்ச்சியான பதிவையும், தங்களது குடும்பப் புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹரிஷ் கல்யாணுக்கும் நர்மதா என்பவருக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த மார்ச் 3ஆம் தேதி இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களது திருமண நாளை முன்னிட்டு ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள பதிவில்,

“அந்நியர்களாக இருந்து காதலில் விழுந்து, ஒருவரையொருவர் தீவிரமாக நேசித்து, பெற்றோராகி அதனுடனான பொறுப்புகளைக் கற்றுக்கொண்டது வரை எவ்வளவு அழகான பயணம் இது! எல்லா சூழ்நிலைகளிலும் நாங்கள் ஒருவருக்கொருவர் சிறந்த நண்பர்களாகவும், ஒருவரின் வெற்றியை மற்றவர் கொண்டாடுபவர்களாகவும், இன்பத்திலும் துன்பத்திலும் பக்க பலமாக நின்றிருக்கிறோம். ஒன்றாக வளர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்து அன்புடன் பயணிப்போம். நம் மகிழ்ச்சியான நான்காம் ஆண்டு என் தங்கமே!” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களைப் பொறுத்தவரை, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளியான ‘டீசல்’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, தற்போது இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தாஷமக்கான்’ திரைப்படத்தில் அவர் தீவிரமாக நடித்து வருகிறார். மேலும், ‘நூறு கோடி வானவில்’ படத்துக்கான படப்பிடிப்புப் பணிகளையும் அவர் ஏற்கனவே நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஹரிஷ் கல்யாண் மற்றும் நர்மதாவின் திருமண நாள் புகைப்படங்களுக்குத் திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.



Source link