புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை காங்கிரஸ் குறை சொல்லி வருகிறது. இதனை மாற்றிவிட்டு, பழையபடி ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியிருந்தார்.
இச்சூழ்நிலையில், கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் சட்டமேலவைக்கு தேர்தல் நடந்தது. ஓட்டுச்சீட்டு முறையில் நடந்த இத்தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெல்ல முடியவில்லை. இதனையடுத்து காங்கிரசை பாஜ தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட சமூக ஊடகப்பதிவில் கூறியதாவது: உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, பீஹார் மற்றும் கர்நாடக ஆகிய 4 பெரிய மாநிலங்களில் 28 இடங்களுக்கு எம்எல்சி தேர்தல் நடந்தது. ஓட்டுச்சீட்டை பயன்படுத்தி தேர்தல் நடந்தது. எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் என நினைக்கிறீர்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
