வீரத்தின் அடையாளம்: தலையில் தழும்புடன் ஸ்மிட் மச்சார்

துபாய்: துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் சென்ற பிளை துபாய் விமானத்தை கடத்த சதி நடந்தது. அதற்கான முயற்சியில் ஓமனைச் சேர்ந்த துணை விமானி ஈடுபட்டார். இந்திய விமானி ஸ்மிட் மச்சாரை அவர் கோடாரியால் தாக்கினார்.

தலையில் படுகாயம் அடைந்த போதும் ஸ்மிட் மச்சார் சாதூர்யமாக செயல்பட்டு சதியை முறியடித்தார். இதனால் 174 பயணிகள் உயிர் தப்பினர்.ஸ்மிட் மச்சாருக்கு உலகளவில் பாராட்டு குவிந்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் அவர் குணமடைந்தார். இருப்பினும் அவரது தலையில் தழும்புகள் ஏற்பட்டுள்ளது.

இவரின் வீரதீரத்தை பாராட்டி, ஐக்கிய அரபு எமிரேட்சின் உயரிய விருதான முதல் வகுப்பு சயீத் 2 விருதை ஸ்மிட் மச்சாருக்கு வழங்கியது. இந்த விருதை துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் வழங்கினார். பிறகு அவர்,யுஏஇ அதிபர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யானை சந்தித்து பேசினார்.

இந்நிகழ்வில் விமானி சீருடையில் வந்த ஸ்மிட் மச்சாரின் தலையில், தழும்பு இருந்தது. அதனை அவர் மறைக்கவில்லை. இதனை பார்த்த நெட்டிசன்கள், இது வீரத்தின் அடையாளம் என பாராட்டி வருகின்றனர்.

Source link