எழுதியவர்:நவாஸ் ஜாவேத் கோச்ரா
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை ராதிகா ஆப்தே, ஒரு படத்தின் சண்டைக்காட்சியில் பணியாற்றியபோ உள்ளாடையுடன் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க தன்னை வற்புறுத்தியதாக கூறியுள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராதிகா ஆப்தே. 2005-ம் ஆண்டு இந்தி சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து பெங்காலி, மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து 2012-ம் ஆண்டு வெளியான தோனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், கபாலி, சித்திரம் பேசுதடி 2, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே நடிப்பில் அடுத்து அக்கா என்ற படம் வெளியாக உள்ளது.
நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ள இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள ராதிகா ஆப்தே, ஒரு திரைப்படத்தில் பணியாற்றிய போது தான் சந்தித்த கசப்பான சம்பவம் ஒன்றைப் பற்றி பேசியுள்ளார். நியூஸ் 18 ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ஒரு படத்தின் சண்டைக்காட்சியில், தன்னை உள்ளாடையுடன் நடிக்குமாறு கேட்டார்கள். இதற்கு எதிராக குரல் கொடுத்த ஒருங்கிணைப்பாளர் ஒருவரை பணியில் இருந்து நீக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
அந்தப் பேட்டியின் போது, ராதிகா ஆப்தே “அவர்கள் என்னிடம், ‘பிரா இல்லாமல் சட்டை அணிந்து கொண்டு பொத்தான்களைத் திறந்து வைக்க முடியுமா?’ என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் கொஞ்சம் பிஸிக் பற்றி யோசித்துப்பாருங்கள் என்று சொன்னேன்; நான் சண்டைக்காட்சி செய்யும்போது அப்படியொரு சம்பவம் நடந்தது” என்று கூறினார்.
தொடர்ந்து சண்டைக்காட்சிகளில் நடிக்கும் போது கூட நடிகைகள் பார்வையாளர்களைக் கிளறிவிட வேண்டும் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுவது குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்த ராதிகா, “என் கருத்துக்கள் சற்று வித்தியாசமானவை; நான் ஒரு கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகும் போதே, அந்த கேரக்டரை பற்றிய உங்கள் பார்வை என்ன என்பதை மிகத் தெளிவாக அவர்களிடம் கேட்டுவிடுவேன். காட்சியைப் படமாக்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இதை என்னிடம் சொல்லாதீர்கள்; அங்குதான் சிக்கலே இருக்கிறது.
எந்த நோக்கத்திற்காகவோ ஒரு படத்தில் பெரும்பாலும் ஆடைகளின்றி இருக்கும் ஒரு கேரக்டரை நீங்கள் எழுதியிருந்தால், நான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவேன். ஆனால், காட்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு என்னிடம் பேரம் பேசி, அந்த ஆடை அணியுமாறு என்னை வற்புறுத்தினால், அது உண்மையிலேயே மிகவும் கடினமாகவும் விரக்தியாகவும் மாறிவிடும்.
இந்த காட்சி தொடர்பான பேச்சவார்த்தை இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து கொண்டே இருந்தது; அவர்கள் என்னிடம், ‘இதை காட்டுவீர்களா? அதை காட்ட வேண்டுமா?’ என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அது முற்றிலும் மன உளைச்சலை ஏற்படுத்தியது; அது உண்மையிலேயே மிகவும் மன அழுத்தத்தைத் தருகிறது” என்று கூறினார்.
இத்தகைய சூழ்நிலைகளில் நெருக்கமான காட்சிகளை ஒருங்கிணைப்பாளர்கள் சிக்குவது குறித்தும் ராதிகா கருத்து
ஆடை இல்லாத அல்லது நெருக்கமான காட்சிகள் தேவைப்படும் படப்பிடிப்பு தளங்களில் அதற்கான விதிகளைப் பின்பற்றும் நெருக்கமான காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் இருந்தாலும், தயாரிப்பாளர்கள் இதுபோன்ற கோரிக்கைகளை வைக்கும் போது, “நீங்கள் ஆபாசத்தைக் காட்ட விரும்புகிறீர்கள், அது சரிதான், ஆனால் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே சொல்லுங்கள். கடைசி நேரத்தில் ஏன் அதிர்ச்சிகளைக் கொடுக்கிறீர்கள்?
இப்போது நம்மிடம் நெருக்கமான காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் இருப்பது மிகவும் சிறப்பானது, ஆனால் அவர்களும் தயாரிப்பாளர்களால் தான் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அவர்கள் நடிகர்களுக்கு ஆதரவாக நிற்கும் போது, அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அது ஒன்றும் எளிய சூழ்நிலை அல்ல. அவர்களின் வருகை நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும், அது எப்போதும் எங்களைப் பாதுகாக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள், அல்லது வேறு வழியின்றித் தங்களின் நிலையை மாற்றிக் கொள்கிறார்கள், அல்லது அவர்கள் உறுதியாக நின்றாலும் எதுவுமே மாறுவதில்லை; எப்படியிருந்தாலும் நீங்கள் வற்புறுத்தப்படுகிறீர்கள். உங்களுக்குப் பிடித்த ஒரு ஒருங்கிணைப்பாளரை உங்களால் பெற முடியாது.”
மேலும் திரைத்துறையில் பொதுவாக இப்படி நடப்பதில்லை, இது எப்போதாவது ஒருமுறை நடக்கும் ஒரு அரிதான சம்பவம். “பெரும்பாலான மக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல; 10 படப்பிடிப்பு தளங்களில் ஒன்றில் தான் இப்படி நடந்தது; ஒன்பது தளங்களில் என்னை முழு மரியாதையுடன் மிகவும் நன்றாக நடத்துகிறார்கள். ஆனால் அந்த ஒரு சம்பவம் இன்னும் நடக்கத்தான் செய்கிறது, மேலும் பிரச்சனை என்னவென்றால் அதைப் பற்றி உங்களால் இன்னும் வெளிப்படையாகப் பேச முடிவதில்லை. என்னால் இன்னும் உங்களிடம் அந்தப் பெயரைச் சொல்ல முடியவில்லையே. வீட்டுக்குச் செல்லும்போது, என்னால் என்றுதான் வெளிப்படையாகப் பேச முடியும் என்று தோன்றும்? அதுதான் பிரச்சனை, அதற்கு என்னிடம் பதில் இல்லை என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
செப்டம்பர் மாதத்தில், ஜூம் (Zoom) ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் போது ராதிகா இந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசியிருந்தார். அதில் அவர், “ஆரம்பத்தில், நான் முற்றிலும் ஆடைகளின்றி நான்கு அல்லது ஐந்து படங்களில் நடித்திருந்தேன். அதனால் பலரும் ‘இவள் செய்வாள்’ என்று நினைக்கத் தொடங்கினர். ஒரு படப்பிடிப்பு தளத்தில் அவர்கள், ‘இந்தச் சண்டைக்காட்சியை உங்களால் செய்ய முடியுமா? பொத்தான்களைப் போடாமல் நடித்தால் என்ன?’ என்று கேட்டார்கள்.
அதற்கு நான், ‘இது ஒரு சண்டைக்காட்சி. அப்படியென்றால் சட்டை விலகும்தானே? இது சாதாரண இயற்பியல்’ என்றேன். அதற்கு அவர்கள், ‘பிரா மற்றும் உள்ளாடையுடன் மட்டும் செய்தால் என்ன?’ என்று கேட்டனர். நான், ‘என்னை என்ன செய்ய வைக்க முயற்சிக்கிறீர்கள்?’ என்று கேட்டேன் என கூறியிருந்தார்.
சமீபத்தில் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 3’ (Lust Stories 3) தொடரில் நடித்த ராதிகா ஆப்தே, நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது ஆண்கள் பதற்றமடைவதைப் பற்றியும் பேசினார். கடந்த மாதம் ஃபிலிம்பேர் (Filmfare) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “என் தலைமுறை ஆண்களும், உங்கள் தலைமுறை ஆண்களும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும் போதெல்லாம், அந்தத் தருணத்தில் இயல்பாகவே பெண்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது, ஏனென்றால் அங்கு ஒரு மாற்றம் ஏற்பட வேண்டியிருக்கிறது. அது இருக்கத்தான் வேண்டும். அவர்களின் இதயத்துடிப்பு பதற்றத்தினால் வேகமாக அடிப்பதை என்னால் உண்மையாகவே கேட்க முடியும். அவர்களின் உடலிலும் மனதிலும் இருக்கும் அந்தப் பலவீனமும் பதற்றமும் உண்மையானது” என்று கூறினார்.
