கஞ்சா கடத்திய வாலிபர் கைது

அரியலுார்: அரியலுார் அருகே, விற்பனைக்காக கஞ்சா கடத்திய சண்முககணபதி, 29, என்பவர் கைது செய்யப்பட்டார்.

அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார், பஸ் ஸ்டாண்டில் பணியரை கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனையிட்டனர்.

அவர், 6 கிலோ கஞ்சாவை பையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர், தஞ்சை கிழக்கு வாசலை சேர்ந்த சண்முககணபதி என்பதும், ஒரிஷா மாநிலத்தில் இருந்து தஞ்சை மாவட்டத்திற்கு கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இவர் மீது ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில், இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. வழக்கு பதிந்த போலீசார், சண்முககணபதியை கைது செய்தனர்.

Source link