OTT: பள்ளிப் பருவ காதல்; சிறுவனிடம் மாட்டிக்கொண்ட ரவுடி: ஓ.டி.டி தளங்களில் இந்த படங்களை மிஸ் பண்ணாதீங்க

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியாகும் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விடவும், ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது, அந்த வரிசையில், இன்று நள்ளிரவு முதல் மேலும் இரண்டு புதிய திரைப்படங்கள் ஓடிடியில் (OTT) வெளியாகவுள்ளன. 

பத்தா

விஜய் சேதுபதி, சாய் பிருத்விராஜ் ஆகியோரை முக்கிய கேரக்டர்களாக கொண்டு பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள ‘பத்தா’ திரைப்படம் நள்ளிரவு ஓடிடியில் வெளியாகிறது. பிரபல இயக்குநர் அட்லீ தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவையும், டி. முத்துராஜ் கலை இயக்கத்தையும் (Production Design) மேற்கொண்டுள்ளனர்.

கிராம மக்கள் அனைவரும் ஒரே மாதிரியாக அஞ்சும், கொடூரமான ‘பத்தா’ என்ற ரவுடிக்கும் சபரி என்ற சிறுவனுக்கும் இடையே வளரும் ஒரு ஆத்மார்த்தமான பந்தத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். சாந்தி பாலச்சந்திரன் மற்றும் விஷ்ணு கோவிந்தன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். நெட்ஃபிளிக்ஸ் (Netflix) நிறுவனம் இதன் ஸ்ட்ரீமிங் உரிமையைக் கைப்பற்றியுள்ளது. அக்டோபர் 29 நள்ளிரவு முதல் இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பாகத் தொடங்கும்.

தெல்லாகாகிதம் 

2026 அக்டோபர் 2 அன்று வெளியான ஒரு தெலுங்கு காதல் மற்றும் குடும்பத் திரைப்படம் ‘தெல்லாகாகிதம்’. இரண்டு பதின்பருவ (Teenage) மாணவர்களின் முதல் காதலையும், அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களையும் பேசும் இத்திரைப்படம் அக்டோபர் 29 நள்ளிரவு ஓடிடிக்கு வருகிறது. ஹர்ஷ் ரோஷன், நட்சத்திரா, அஜய், சரண்யா, ராஜ்குமார் காசிரெட்டி ஆகியோரை முதன்மை பாத்திரங்களாகக் கொண்டு ரமேஷ் பாண்ட்ரெட்டி இயக்கியுள்ள இப்படத்திற்கு விஜய் புல்கானின் இசையமைத்துள்ளார். ‘இடிவி வின்’ (ETV Win) தளத்தில் நள்ளிரவு முதல் தெல்லாகாகிதம் திரைப்படத்தைப் பார்க்கலாம்.

Source link