Arnab: 3 மணிநேரமாக நகராமல் ஒரே இடத்தில் நிற்கும் அர்னாப் புயல்; வானிலை மையம் சொல்வது என்ன?

வங்கக்கடலில் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளில் அர்னாப் புயல் நிலைகொண்டுள்ளது.

இந்திய வானிலை மையத்தின் தற்போதைய அப்டேட்டின் படி,

“ஆந்திரக் கடலோரப் பகுதியை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிகக் கடும் புயலான ‘அர்னாப்’, கடந்த 3 மணி நேரமாக எந்தவொரு பெரிய நகர்வுமின்றி ஒரே இடத்தில் நிலையாக நீடிக்கிறது.

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 2 மணி நேரத்திற்குள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்பகுதியில் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே, ஏனாம் பகுதிக்குத் தெற்கே மிக அருகில் ‘மிகக் கடும் புயலாகக்’ கரையைக் கடக்கக்கூடும்.

அர்னாப் புயல்

நிலப்பரப்பில்…

அப்போது மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 140 கி.மீ. வேகம் வரையிலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

‘அர்னாப்’ மிகக் கடும் புயல் நிலப்பரப்புடன் தொடர்ந்து மோதி வருகிறது. புயலின் வடக்குப்பகுதியின் சுவர மேகப் பகுதி (Wall cloud region) நிலப்பரப்பிற்குள் மேலும் ஊடுருவியுள்ளது.

கடுமையான புயலின் மையப்பகுதி கடலோரக் கோட்டிற்கு மிக அருகில் உள்ளது, மேலும் புயல் கரையைக் கடக்கும் செயல்முறை அடுத்த 2 மணி நேரத்திற்குத் தொடர்ந்து நீடிக்கும்.”

தமிழ்நாட்டில்…

இந்திய வானிலை மையம் அர்னாப் புயலையொட்டி தமிழ்நாட்டிற்கு எந்தவொரு எச்சரிக்கையையும் கொடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய மாவட்டங்களின் துறைமுகங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளின் துறைமுகங்களுக்கும் நேற்று புயல் எச்சரிக்கை வழங்கியிருந்தது இந்திய வானிலை மையம்.

நேற்று இரவு அர்னாப் புயல் சீற்றத்தால் சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து, ஊருக்குள் தண்ணீர் புகுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link