திமுக முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் ரெய்டு

திருச்சி: திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநிர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் நேரு. நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனத்திற்காக ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த மாதம் நேரு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை ஐகோர்ட் அனுமதியளித்திருந்தது.

தற்போது, முன்னாள் அமைச்சர் நேருவின் வீடு, அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி, சென்னையில் உள்ள நேருவின் இல்லத்தில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரெய்டு குறித்து தகவல் அறிந்த திமுகவினர் நேருவின் வீட்டின் முன்பு குவிந்து வருகின்றனர்.

ஏற்கனவே, தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Source link