திருச்சியில் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை என்ன? – dvac raid at former minister kn nehru residence mk stalin criticizes tvk govt

திருச்சியில் உள்ள முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) அதிரடி சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போதைய தமிழக ஆளுங்கட்சியான த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) அரசைக் கடுமையாகச் சாடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களில் வெளியாகும் முக்கியச் செய்திகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே இந்த சோதனைகள் அரங்கேற்றப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“வெற்றி வெண்டெட்டா பாலிடிக்ஸ்” – மு.க.ஸ்டாலின் விளாசல்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:

கவனத்தைத் திசைதிருப்பும் நாடகம்: பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை தற்போதைய முதலமைச்சர் மாற்றிவிட்டார். இந்த அவப்பெயரையும், ஊடகங்களின் ‘பிரேக்கிங் நியூஸ்’களையும் திசைதிருப்பவே தற்போது இந்த “ரெய்டு ஷோ” நடத்தப்படுகிறது. ஊழல் பெருச்சாளிகளைத் தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க அரசை “TN Branch Washing Machine” என்று அவர் சாடியுள்ளார். மேலும், முன்னாள் அமைச்சர்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்படும் இந்த அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை “Vettri Vendetta Politics” (வெற்றி வெண்டெட்டா பாலிடிக்ஸ்) என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பதிவு

விவரம் பின்வருமாறு,

பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் – ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.

ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!

டிடிவி தினகரன் காட்டமான பிரஸ் மீட்…இது தான் டிவிஸ்ட்?

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் – முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது.

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதை அடுத்து, ஆளுங்கட்சியான த.வெ.க அரசை மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையாகச் சாடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்! என பதிவிட்டு உள்ளார்.

Source link