புதுடில்லி: ஜிஎஸ்டி வரி, வருமான வரி, காஸ் விலை, பென்சன் ஓய்வூதியதாரர்களுக்கான சில முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவை நவ.,1ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.
* பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதைப் போல, விற்பனைக்கு பிந்தைய தள்ளுபடிக்கான ஜிஎஸ்டி விதிகளை தளர்வு செய்யவும், வணிக நிறுவனங்கள் பணத்தை திரும்பப் பெறுவதையும் நவ.,1ம் தேதி முதல் விரைவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
* பென்சன் பெறும் அரசு ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். 80 வயதிற்கு உட்பட்ட ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1 முதல் தங்களது சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் அக்டோபர் 1 முதல் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. நவ.,30ம் தேதி கடைசி நாளாகும்.
* மாற்றுத்திறனாளி ஓய்வூதிய உதவியைப் பெறுவதற்கான குறைந்தபட்ச உடல் குறைபாடுகளின் அளவை 80% லிருந்து 40%ஆகக் குறைக்கவும், குறைந்தபட்ச வயதுத் தகுதியை நீக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது நவம்பரில் இருந்து அமல்படுத்துவது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
* 2026-27-க்கான வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31ல் இருந்து நவம்பர் 21ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
*மாதந்தோறும் 1ம் தேதி காஸ் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நவ.,1ம் தேதி விலை மாற்றம் பற்றி எந்தத் தகவலும் இல்லை
