வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்?

இதன் ஒரு பகுதியாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாபச்சன் தொகுப்பாளராக இயங்கும் இந்தியாவில் பிரபலமான ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் சாய் பல்லவி , ரன்பீர் கபூருடன் கலந்து கொண்டார். இந்த எபிசோட் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் சாய் பல்லவியிடம் அவரது எதிர்கால கணவர் குறித்த எதிர்பார்ப்புகளை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்?

அதற்குப் பதிலளித்த சாய் பல்லவி, “எனது தனிப்பட்ட சுதந்திரத்தையும் எனது தொழில் வாழ்க்கையை மதிக்கக்கூடிய நபராக அவர் இருக்க வேண்டும். எனது வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக சுதந்திரமாகவும் தற்சார்பு மிக்கதாகவும் நான் நிர்வாகிக்க , அவர் ஆதரவு அளிக்க வேண்டும். என்னுடைய விருப்பங்களை மதித்து என்னுடைய லட்சியங்களை அடைவதற்கு துணையாக இருப்பவரையே நான் வாழ்த்துத் துணையாக தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.

ஒரு மதிப்புமிக்க உறவில் இருக்கும் இருவருக்கும் பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும் மிகவும் அவசியம் . என் வருங்கால கணவர் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவராகவும் இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அவருக்கு நன்றாக சமைக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

Source link