கடைசி பஸ் மிஸ்ஸிங்; காட்டுக்குள் சிக்கிய சாய் பல்லவிக்கு வழி காட்டிய நாய் குட்டி: ஹனுமான் சாலிசா படிக்க இதுதான் காரணமா?

சாய் பல்லவி சீதையாக நடித்துள்ள ராமாயணம் திரைப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாய் பல்லவி, மருத்துவராக இருந்து நடிகையாக மாறிய தனது பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளதார். 

சமீபத்தில், ஜீ5 தளத்தில், ஜகபதி பாபுவின் ‘ஜெயமு நிச்சயமு ரா வித் ஜகபதி’ என்ற உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற சாய் பல்லவி, மருத்துவரில் இருந்து நடிகராக மாறிய தனது பயணம், திரைப்படங்களின் தேர்வு, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வரை தனது வாழ்க்கைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். மேலும், தற்போது தினமும் தவறாமல் ஜபித்து வரும் ஹனுமான் சாலிசாவைத் தான் கற்றுக்கொண்டதற்கான பின்னணியை வெளிப்படுத்தும் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பற்றி கூறியுள்ளார்.

நிகழ்ச்சியின் தொகுப்பாளரிடம் பேசிய சாய் பல்லவி, சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரி பூஜா கண்ணன் மற்றும் ஒரு நண்பருடன் கசோல் சென்றிருந்தனர். ஒரு நாள், அவர்கள் பார்வதி பள்ளத்தாக்கிற்குச் செல்ல முடிவு செய்தனர். பார்வதி நதியில் நீராடும் போது பார்வதி தேவி தனது விலைமதிப்பற்ற ஆபரணங்களில் ஒன்றை இழந்துவிட்டதாக நம்பப்படுகிறது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணைத் திறக்க, நாக தேவனான சேஷன் சீறியதால், பூமியிலிருந்து கொதிக்கும் நீர் பொங்கி வெளிவந்து அந்த ஆபரணத்தை மீண்டும் மேலே கொண்டு வந்தது. மற்றொரு புராணக்கதையின் படி, சிவபெருமான் இந்த பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தியானம் செய்ததாகவும், அங்கு தவம் செய்த தனது துணைவியாரான பார்வதியின் பெயரையே இதற்குச் சூட்டியதாகவும் கூறப்படுகிறது.

மாலை 5 மணியளவில் கடைசி பேருந்து புறப்பட்டுவிடும் என்பதை அறியாமல், தனது சகோதரி மற்றும் நண்பருடன் பள்ளத்தாக்கை பார்க்க சென்றோம். நாங்கள் திரும்புவதற்கான கடைசி பஸ் ஏற்கனவே கிளம்பிவிட்டது. அதனால் நாங்கள் மலைப்பாதையில் கீழ்நோக்கி முழு தூரமும் நடந்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது நிலா வெளிச்சம் மட்டுமே எங்களுக்கு வழிகாட்டியது. இடதுபுறம் அடர்ந்த காடு இருந்தது. அது மிகவும் இருட்டாக இருந்தது, திடீரென்று எங்கிருந்தோ ஒரு நாய்க்குட்டி எங்களிடம் வந்தது. பயணம் முடியும் வரை அந்த நாய் எங்களுடனே நடந்து வந்தது. அப்போது எனது சகோதரிக்கு ஹனுமான் சாலிசா தெரிந்திருந்ததால், அதை உரக்கப் படிக்கத் தொடங்கினார்.

“என் வாழ்க்கையில் முதல்முறையாக, ‘அச்சச்சோ! எனக்கு இது தெரியாமல் போச்சே? நான் இதைக் கண்டிப்பாய் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று நினைத்தேன். பூஜா ஹனுமான் சாலிசாவின் தொடக்க வரிகளைப் பாடி முடித்த உடனேயே, அந்த நாய்க்குட்டி எங்கிருந்தோ தோன்றி, கடைகள் வரிசையாக இருந்த பகுதியின் வெளிச்சம் தெரியும் வரை முழு வழியிலும் எங்களை அழைத்துச் சென்றது.

“நாங்கள் அந்த கடைகளை அடைந்ததும், அந்த நாய்க்குட்டி திரும்பிச் சென்றுவிட்டது. ஒரு சிறிய நாய்க்குட்டியின் வடிவில் கடவுளே எங்களுடன் நடந்து வந்ததாக நான் நினைக்கிறேன். அன்றைய நாளிலிருந்து நான் ஹனுமான் சாலிசாவை ஜபிக்கத் தொடங்கினேன். நான் தைரியமாக இருப்பதற்காக தினமும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது அதை ஜபிக்கிறேன்,” என்று சாய் பல்லவி கூறியுள்ளார்.

சாய் பல்லவி தவிர, ‘ராமாயணம்’ படத்தில் ராமராக ரன்பீர் கபூர், ராவணனாக யாஷ், லட்சுமணனாக ரவி துபே, ஹனுமானாக சன்னி தியோல், மந்தரையாக ஷீபா சத்தா, மண்டோதரியாக காஜல் அகர்வால், கைகேயியாக லாரா தத்தா, சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.



Source link