கையில் சிக்கிய ஜெம் வீரமணி வீடியோ: பணம், தங்கம், நிலம்- லாக் பண்ண பிரகாஷ் கண்ணையா – prakash kannaiah locked gems veeramani with crores of money in pocso crime

ஜெம் வீரமணி வழக்கில் பிரகாஷ் கண்ணையா பெரிய அளவில் டீலிங்கில் ஈடுபட்டிருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர் லண்டனில் பதுங்கியிருப்பதால் ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இவரை பிடித்தால் இன்னும் பல உண்மைகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெம் வீரமணி கேஸ் என்னாச்சு? என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. ஏனெனில் இதை டைவர்ட் செய்யும் அளவிற்கு தமிழக அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, குழந்தைகள் மாயம், தேனி சிறை காவலர்கள் தப்பியோட்டம், மீண்டும் கைது செய்த போலீஸ், விலைவாசி உயர்வு, பேராசிரியர் கலையரசனை அதிகாலையில் இழுத்து சென்று விசாரணை எனக் களம் சூடுபிடிக்க, இன்றைய தினம் தேவர் குருபூஜையை ஒட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்துவது, பசும்பொன்னில் கொண்டாட்டம் என கவனம் பெற்று வருகிறது.

ஜெம் வீரமணி வழக்கில் இதுவரை சிக்கியவர்கள்

தோழி சாந்தி, இவரது கணவர் மகேந்திர சிம்ஹன், ஓட்டுநர்கள் லாசர், பார்த்திபன், பாபு, கணேசன், சக்திவேல்ஜெம் வீரமணி உள்ளிட்ட 8 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் இருக்கின்றனர். மேலும் பிரகாஷ் கண்ணையாவை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவர் லண்டனில் தலைமறைவாக இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் செய்த TVK Warriors! அம்பலமான தொழிலதிபர் வீரமணி

லண்டனில் பிரகாஷ்- ப்ளூ கார்னர் நோட்டீஸ்

எனவே இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் மூலம் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டு அவர் எங்கிருக்கிறார் என்ற விவரத்தை சேகரிக்கும் முயற்சியில் தமிழக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுவரை கைது செய்யப்பட்டவர்களை விட பெரிய அளவில் மோசடி பேர்வழியாக பிரகாஷ் கண்ணையா இருப்பார் என்கின்றனர். இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர். ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனாவின் நண்பர். இந்த நட்பால் வீரமணிக்கு நெருக்கமாகி ஒருகட்டத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் விவகாரத்தை அறிந்து கொண்டுள்ளார்.

வீரமணி மூலம் பணம், தங்கம், நிலம் கைமாற்றம்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வீடியோக்களை கையில் வைத்து கொண்டு ஜெம் வீரமணியை மிரட்டி கோடிக்கணக்கில் பணத்தை வாங்கியிருக்கிறார். மேலும் கிலோகணக்கில் தங்கமும், சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள நிலங்களையும் கைப்பற்றியிருப்பதாக தெரிகிறது. முதல்கட்டமாக தனது சொத்துகளை விற்று 20 கோடி ரூபாயை பிரகாஷ் கண்ணையாவிடம் ஜெம் வீரமணி அளித்திருக்கிறார். அதன்பிறகு படிப்படியாக பணம் கைமாறியுள்ளது. பெரிய அளவில் பணம் கைக்கு வந்ததும், அதை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்காக ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

லண்டனில் பிரகாஷ் கண்ணையா

இதில் கிடைத்த வெளிநாட்டு தொடர்புகள் அடிப்படையில் தான், தற்போது லண்டனில் பதுங்கியிருப்பதாக கூறுகின்றனர். ஜெம் வீரமணியிடம் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விசாரணையில் அவர் யார், யாருக்கு பணம் அளித்துள்ளார். தனது பாலியல் குற்ற விவகாரத்தில் உதவி செய்தவர்கள் யார், யார் போன்ற விவரங்களை வாக்குமூலமாக அளித்துள்ளார்.

அடுத்து சிக்கப் போவது யார்?

எனவே பிரகாஷ் கண்ணையா உடன் தேடுதல் வேட்டை முடிவுக்கு வருமா? அவரை பிடித்தால் புதிய தொடர்புகள் குறித்த தகவல்கள் கிடைத்து விசாரணை நீளுமா? என்பது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. எவ்வளவு பணம், எத்தனை கிலோ தங்கம், எங்கெங்கு நிலம் கைமாற்றம் போன்ற விவரங்களை சேகரித்து அவற்றை முடக்குவதற்கு ஒருபுறம் போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், லண்டனில் இருப்பவரை சென்னைக்கு அழைத்து வர மறுபுறம் காய் நகர்த்தி கொண்டிருக்கின்றனர்.

Source link