பிரதமர் மோடி பசும்பொன் வருவார்; துணை ஜனாதிபதி சிபிஆர் பேட்டி

-நமது நிருபர்-

கமுதி அருகே பசும்பொன் கிராமத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறியதாவது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுதந்திர போராட்ட காலத்தில் மட்டுமில்லாமல் சமுதாயத்திற்காக உழைப்பதற்காக தன் வாழ்வில் குறிக்கோளாக முழுமூச்சாக செயல்பட்டவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடைய மனதில் இடம் பிடித்தவர். அவரை தலைவராக ஏற்றுக் கொண்டு இந்திய தேசத்தின் எழுச்சிக்கும் தெய்வீக எழுச்சிக்கும் தமிழக மண்ணில் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்.

அவர் மட்டும் சில அரசியல் சமரசம் செய்திருந்தால் தமிழகத்தின் முதல்வராக முத்துராமலிங்க தேவர் நிச்சயமாக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருப்பார்கள். அவர் எந்த நேரத்திலும் எந்த சமரசத்தையும் செய்து கொண்டதில்லை. தன் வாழ்நாள் முழுவதும் நேர்மை தவம் கண்ணியம் மிகுந்த வாழ்க்கை அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அதிக குரல் கொடுத்தவர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் நுழையும் போராட்டத்தை யார் தடுத்தாலும் நான் முன்னின்று நடத்துவேன் என்று சொல்லி வெற்றி பெற்றார். தன்னுடைய சொத்தில் பெரும் பகுதியை தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தான் தந்து இருக்கிறார்.

Image 1637960

இப்படி மகத்தான தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். அவர் இறப்பும் பிறப்பும் ஒரே நாளில் நடந்திருப்பது மகா சித்த புருஷர் என்பதை நிரூபிக்கிறது. பிரதமர் மோடி ஒருநாள் கண்டிப்பாக பசும்பொன் வருகை தருவதாக கூறியுள்ளார். இவ்வாறு சிபி ராதாகிருஷ்ணன் கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய துணை ஜனாதிபதி சிபிஆர் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

Source link