பொதுவாக நாம் எல்லோரும் கேள்விப்படுவது “தாயன்பிற்கு எல்லை உண்டோ?” என்பது தான்.
ஆனால் இங்கு ஒரு மாமியார், கோமாவில் இருந்த தன் மருமகளை ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல… 17 வருடங்கள் கவனித்து, இன்று அவரை நடமாட வைத்துள்ளார்!
இன்றைய காலகட்டத்தில் குடும்ப உறவுகளில் விரிசல்களையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்து வருவதையும் அடிக்கடி காண்கிறோம். அதிலும் குறிப்பாக, மாமியார்-மருமகள் தினமும் போடும் சண்டை, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் போவது, மருமகளைப் பற்றிப் பக்கத்து வீடுகளில் புகார் சொல்வது, அதேபோல் மருமகளும் மாமியாரைப் பற்றித் தன் பிறந்த வீட்டில் குற்றம் சொல்வது, கல்யாணமான ஓரிரு மாதங்களிலேயே தனிக்குடித்தனம் போவது எனப் பல சம்பவங்களைப் பார்க்கிறோம்.
இன்னும் ஒரு படி மேலே போய், மாமியாரை கொல்வதற்கு கூலிப்படையை ஏவுவது, அதேபோல மாமியாரும் மருமகளை கொல்ல சதி செய்வது, மகனிடம் சொல்லி விவாகரத்துக்கு ஏற்பாடு பண்ணுவது போன்றவை நாம் அன்றாடம் பார்க்கும் செய்திகளாகிவிட்டன.
ஆனால் இங்கு ஒரு மாமியார், தன் மருமகளைத் தன் சொந்த மகளை போல் பார்த்து மருத்துவ உதவி செய்து மீட்டெடுத்த விஷயம் உலகம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது.
“தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை” என்பது பழமொழி. ஆனால், சில உறவுகள் ரத்த உறவுக்கும் அப்பால் தியாகத்தின் மூலம் உன்னதமானதாக மாறுகின்றன. இதற்குச் சிறந்த உதாரணமாகச் சமீபத்தில் சீனாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பதினேழு ஆண்டுகளாகக் கோமா நிலையில் இருந்த மருமகளை, ஒரு மாமியார் தன் சொந்த மகளாகப் பாவித்து மீட்டெடுத்த அசாத்திய நிகழ்வு மனிதநேயத்தின் உச்சமாகும்.
