ஆக்லாந்து: இந்தியா – நியூசிலாந்து இடையேயான 4வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வைபவ் சூர்யவன்ஷிக்கு பதிலாக இஷான் கிஷானும், புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக மயாங்க் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியில் ஜேமிசனுக்கு பதிலாக நாதன் ஸ்மித் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் நிறைவடைந்து விட்டன. அந்த மூன்றிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
