“தொகுதி மறுசீரமைப்பு அநீதிக்கு எதிராக நாம் நடத்துவது போர்!”

நாமக்கல்: “தொகுதி மறுசீரமைப்பு அநீதிக்கு எதிராக நாம் நடத்திக் கொண்டிருப்பது போராட்டம் இல்லை, போர். போர்கள் ஒன்றும் தமிழ்நாட்டுக்கு புதியது இல்லை” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், குமாபராளையம் ஆகிய 5 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் ராணி, மதிவேந்தன், பூமலர், மூர்த்தி, பாலு ஆகியோர் போட்டியிடுகின்றனர். திருச்செங்கோட்டில் திமுக கூட்டணியில் கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் போட்டியிடுகிறார். இவர்களை ஆதரித்து நாமக்கல் பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியது:

“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு… கருப்புக் கொடியேற்றி இன்றைக்கு காட்டிவிட்டோமா, இது வெறும் ட்ரெய்லர்தான். மெயின் பிக்சரை பார்க்க வேண்டும் என்று டெல்லி ஆசைப்படக் கூடாது.

Source link