கையில் பணம் புழங்கிக்கொண்டே இருக்க செய்யக் கூடாத தவறுகளின் லிஸ்ட் | பணம் வளர்ப்போம் – 4

என்ன தான் பார்த்து பார்த்து நிதி திட்டமிடல் செய்தாலும், சில நேரங்களில் சில தவறுகளும் நடந்துவிடும். அவை தெரிந்து செய்யும் தவறுகள் அல்ல… தெரியாமல் செய்யும் தவறுகள் தான்.

அவை என்னென்ன என்பதை பட்டியலிடுகிறார் நிதி நிபுணர் சுந்தரி ஜகதீசன்.

“நாம் செய்யும் நிதி தவறுகளில் முதல் இடத்தில் இருப்பது செலவுகள் தான். இதை முடிந்தளவு குறைக்க வேண்டும்… தேவையில்லாத செலவுகளைச் செய்யவே கூடாது.

சுந்தரி ஜகதீசன்

அடுத்ததாக, இப்போது நிறைய பேர் அதிக கடன் வாங்கி தள்ளாடுகின்றனர்.

உங்கள் மாத வருமானத்தில் 20 – 25 சதவிகிதம் மட்டுமே கடனுக்குச் செல்லும் தொகையாக இருக்க வேண்டும். இதில் மிக மிக கவனமாக இருங்கள்.

மிக உஷாராக இருக்கிறோம் என்று பல இன்சூரன்ஸ்களை இப்போது எடுக்கின்றனர். ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு மட்டும் வைத்துவிட்டு பிற இன்சூரன்ஸ்களை ஏஜென்டிடம் பேசி கிளோஸ் செய்யுங்கள்.

அதற்கு செல்லும் பணத்தை முதலீட்டிற்குத் திருப்புங்கள்.

இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு மேல் வைத்துக்கொள்ள வேண்டாம். அதிகம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகள் மோசடி பேர்வழிகளின் கையில் சிக்கி விடுகிறது. அதனால், இதில் கவனம் தேவை.

எக்காரணத்தைக் கொண்டும் 2 கிரெடிட் கார்டுகளுக்கு மேல் வேண்டாம். ஒருவேளை, அது உங்களிடம் இருந்தால், அதை சரண்டர் செய்துவிடுங்கள்.

டைம் பாஸ், காசு வரும் என்று ஆன்லைன் சூதாட்ட வலையில் மட்டும் விழுந்துவிடவே விடாதீர்கள்.

 OTT
OTT

பார்க்காத OTTக்களை தொடர்ந்து ஆட்டோ ரினியூவலில் இருந்தால், அதை ரிவ்யூ செய்து மாற்றுங்கள்.

இப்போது செய்யலாம்… அப்போது செய்யலாம் என்று முதலீட்டைத் தள்ளிப்போட்டு கொண்டு இருக்காதீர்கள். உடனே தொடங்குங்கள்.

பல பல மோசடிகள் இன்றைய காலக்கட்டத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அதில் சிக்காமல் தப்பித்துக்கொள்வது நம் சமார்த்தியம் தான்.

குழந்தைகளுக்கு அதிக பொருள்களை வாங்கிக் கொடுத்து, பணம் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் செய்யாதீர்கள்.

மிக மிக முக்கியமாக, நிதி திட்டமிடலுக்கு ஒரு இலக்கு நிர்ணயித்து முதலீடு, சேமிப்பை செய்யுங்கள். அப்போது தான் அது முழு கரையை சென்று சேரும்.

முதல் நான்கு அத்தியாயங்களில் 25 – 32 வயதிற்குள் இதை செய்ய வேண்டும்… அதை செய்ய வேண்டும்… என்று சொல்லியிருக்கிறோம்.

’32 வயதிற்கு மேல் உள்ள நாங்கள்?’ என்று கேட்பவர்களுக்கு, ‘Better Late than Never’. உங்களுக்கான நிதி தேவைகளைப் பட்டியலிட்டு, நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுங்கள்.

இல்லையென்றால், உங்களது கேள்விகளை இங்கே கமென்ட் செய்யுங்கள். நாங்கள் பதிலளிக்கிறோம்”.

Source link