பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஒரு தார்மிக கடமையை, மக்கள் தொகை சார்ந்த கண்ணிவெடிகள் நிறைந்த ஒரு சிக்கலான களத்துடன் நாம் ஏன் முடிச்சுப் போட வேண்டும்?
பெண்களுக்கான இட ஒதுக்கீடு பலன்தரத் தயாராக உள்ளது. அதை தொகுதி மறுவரையறை உடன் இணைப்பது என்பது, இந்தியப் பெண்களின் லட்சியங்களை, பணயக் கைதிகளாகப் பிடித்து வைப்பதற்குச் சமம். தொகுதி மறுவரையறை என்பது கூட்டாட்சியின் கட்டமைப்பையே சிதைத்துவிடக்கூடிய சிக்கல்கள் நிறைந்தது. தொகுதி மறுவரையறை செயல்முறை கறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். இதை அவசர கதியில் மேற்கொள்ள முடியாது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுங்கள். நாங்கள் அதற்கு ஆதரவு அளிப்போம்.
தொகுதி மறுவரையறையைப் பொறுத்தவரை, அதை நாம் ஒத்திவைப்போம். தயவுசெய்து நாட்டின் பரந்த நலன்களைக் கருத்தில் கொள்ளுங்கள். தொகுதி மறுவரையறைக்கு கவனமான ஆலோசனைகள் தேவை. இது பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை ஆழப்படுத்தவும், கூட்டாட்சி சமநிலையை வலுவிழக்கச் செய்யவும் கூடும். தொகுதி மறுவரையறையின் விளைவுகள் என்ன என்பது குறித்து நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். இதில் ஆழ்ந்த கலந்தாய்வு தேவைப்படுகிறது.
அனைத்து மாநிலங்களின் எண்ணிக்கையையும் 50% அதிகரிப்பது என்ற அமித் ஷாவின் சூத்திரம், ஒரு நிலையற்ற அரசியல் அறிக்கை. இது சட்டமன்றத்தால் உறுதி அளிக்கப்பட்ட ஒன்றல்ல. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது காட்டப்பட்ட அதே அவசரத்துடன் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் அது பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மையை உருவாக்கும் அபாயம் உள்ளது. அத்தகைய மறுவரையறை இறுதியில் ஒரு அரசியல் அரக்கத்தனமாகவே மாறிவிடும். எனவே இதைச் செய்யாதீர்கள்” என தெரிவித்தார்.
