திமுகவிடம் அக்கவுண்டில் பணம் வாங்கிய கம்யூனிஸ்ட்கள்!
இன்றைய தினம் பழனியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை பேசுகையில் “கம்யூனிஸ்ட் கட்சிகள் முன்பெல்லாம் நன்றாக இருந்தது. எப்போது அவர்கள் திமுகவிடம் அக்கவுண்ட்ல பணம் வாங்கினார்களோ அன்றே மதிப்பும், மரியாதையும் போய்விட்டது” என கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
மேலும் திமுக கூட்டணி சார்பில் பழனியில் போட்டியிடக்கூடிய சி.பி.எம் வேட்பாளர் பாண்டியை விமர்சித்து பேசிய அண்ணாமலை, திண்டுக்கல்லில் 2 முறை தோற்று expiry ஆன சி.பி.எம் வேட்பாளர் பழனி வந்துள்ளதாக பேசியுள்ளார். மாப்பிள்ளை அவர்தான், அவர் போட்ருக்க சட்டை என்னுது என்பதுபோல் சி பி எம் கட்சிக்கு பழனிக்கு கொடுத்துள்ளனர் எனவும் அவர் கலாய்த்து பேசியுள்ளார்.
ஊழலுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம் என மாநில செயலாளர் சண்முகம் கூறுகிறார், கம்யூனிஸ்ட் கட்சியை இந்தியா முழுக்கவே மக்கள் நிராகரிக்க தொடங்கிவிட்டதாக அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
மத்திய அரசின் தரவரிசை பட்டியிலில் சுத்தமான நகரங்களில் 585 வது இடத்தில் பழனி உள்ளது. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய பழனியை குப்பை மேடாக மாற்றியதே திமுக அரசின் சாதனை என விமர்சித்துள்ளார். மத்திய அரசின் தரவரிசை பட்டியிலில் சுத்தமான நகரங்களில் 585 வது இடத்தில் பழனி உள்ளது என அவர் கூறியிருக்கிறார்.
ஊழல் கட்சி, ஊழல்வாதி இருக்கலாம் ஊழல் குடும்பம் திமுகதான். ஐபி பெரியசாமி, அவர் மகள், மகன் செந்தில்குமார் அனைவரும் மீதும் வழக்கு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். அமலாக்கத்துறை ரெய்டு வரை நடந்துள்ளது எனவும் பழனியில் நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது என்பதால் திண்டுக்கல் செந்தில்குமார் ஓடிவிட்டார் என ஐ.பெரிய சாமியை கடுமையாக சாடியுள்ளார்.
நிராகரிக்கப்படும் Annamalai ? EPS காரணமா?
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, வையாபுரி குளம், சண்முக நதிகள் சாக்கடைகளாக மாற்றி விட்டன என அவர் தெரிவித்துள்ளார். ஈரோடு – பழனி ரயில்பாதை ஆங்கிலேயர் காலத்திலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு முறை பணம் வந்தும் வீணாகிவிட்டது. மத்திய அரசு இணைந்து அதிமுக இதனை செய்து முடிக்கும எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
அதிமுக காலத்தில் பல்வேறு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. திமுகவினர் என்ன உருவாக்கினார்கள் என கேள்வி எழுப்பிய அவர், கம்யூனிஸ்டுகளை இந்தியா முழுவதுமே மக்கள் நிராகரிக்க தொடங்கினர்.
