Gk Mani About Anbumani,அன்புமணி மகள்கள் வைத்த குற்றசாட்டு..ஜி.கே மணி கொடுத்த விளக்கம் – gk mani reply to anbumani daughters for their allegations

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் நடந்த ஒரு பரப்புரையின் போது மயக்கமடைந்தார். பிறகு அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது உடல்நலம் தேறி வருகின்றார். இந்த சமயத்தில் ராமதாஸின் மகனான அன்புமணி ,ஜி.கே மணி மீது குற்றம்சாட்டினார். நேற்று அன்புமணி மகள்கள் பென்னாகரம் தொகுதியில் பரப்புரை செய்தார்கள். அந்த பரப்புரையில் ஜி.கே மணியை கடுமையாக குற்றம்சாட்டினார்கள்.

ஜி.கே மணி அவர்களால் தான் எங்களின் குடும்பம் பிரிந்தது. ராமதாஸ் ஐயாவை பார்க்கவே அவர் விடவில்லை. அவர் எங்களின் குடும்பத்திற்கு துரோகம் செய்துவிட்டார். எனக்கு குழந்தை பிரிந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் ஐயாவிடம் அந்த குழந்தையை காட்டவில்லை. குழந்தையை காட்ட அனுமதி கிடைக்கவில்லை. சமீபத்தில் கூட ஐயாவை பரப்புரைக்கு வர வைத்தனர். அப்போது ஐயா மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அன்புமணி மகள்கள் குற்றசாட்டு

அப்போதும் கூட எங்களை ஐயாவை பார்க்க விடவில்லை என தொடர்ந்து ஜி.கே மணி மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் இதற்கெல்லாம் தற்போது ஜி.கே மணிவிளக்கம் கொடுத்திருக்கின்றார். அவர் கூறியது, அன்புமணி அவர்கள் சில பேரை வைத்துக்கொண்டு முகநூலில் ஐயாவை கடுமையாக பேசி வருகின்றனர். அவரின் மகள்களை விட்டு எனக்கு எதிராக பேச சொல்கின்றார். அன்புமணியையும் ஐயாவையும் நான்தான் பிரித்தேன் என சொல்கின்றார்.

ஜி.கே மணி விளக்கம்

இதை கேட்கும்போது என் மனம் வருந்துகிறது. எந்த சக்தியாலும் ஐயாவையும் அவரையும் பிரிக்க முடியாது. நான் ஐயாவிடம் அன்புமணியை பார்க்க வேண்டாம் என சொன்னால் அவர் கேட்பாரா ? கண்டிப்பாக கேட்கமாட்டார். ஐயாவை பார்க்கக்கூடாது என அன்புமணியிடம் நான் எப்படி சொல்ல முடியும். சேலம் பரப்புரையில் ராமதாஸ் ஐயாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நாங்கள் எல்லாம் பதறிப்போய் அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம்.

அப்போதும் அன்புமணிவந்து அப்பாவை பார்க்கவில்லை. மருத்துவமனையில் இருக்கும் அப்பாவை வந்து பார்க்காமல், அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் உங்களை துளைத்து விடுவேன் என்கின்றார். இதெல்லாம் சரியே இல்லை. அப்பா மீது அக்கறை இருந்தால் விஷயம் தெரிந்து ஓடோடி மருத்துவமனைக்கு வந்து பார்த்திருக்க வேண்டாமா ? ஆனால் அன்புமணி வரவே இல்லை. பதிலுக்கு நான் அவர்களை பார்க்க விடவில்லை என பொய் செய்தியை பரப்புகின்றனர்.

அன்புமணி சந்திக்கவே இல்லை

இப்பொது மட்டுமல்ல சமீபகாலமாக ராமதாஸ் ஐயாவை சந்திக்க அன்புமணி வரவே இல்லை. எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அன்புமணி வரவே இல்லை. அன்புமணி மகள்களும் என்னை குற்றம்சாட்டுகின்றனர்.இதெல்லாம் நியாயமே இல்லை. அன்புமணி தான் ஐயாவிற்கு துரோகம் செய்துவிட்டார் என அனைவருக்கும் தெரிகின்றது. ஆனால் கிராமப்புறத்தில் இருக்கும் மக்களிடம் இவர்கள் அன்புமணியையும் ஐயாவையும் ஜி.கே மணி பிரிந்துவிட்டார் என பரப்புரை செய்கின்றனர்.

இவர்கள் சொல்வதை பார்த்து ஒரு சிலர் கண்ணீரும் விடுகின்றனர். இதெல்லாம் நாடகம் தான். இந்த நாடகம் வெகு நாள் எடுபடாது. இன்னும் சொல்லப்போனால் அன்புமணியின் வளர்ச்சிக்கு நான் மிகவும் பாடுபட்டேன். சின்னையா என சொல்லி அவரை மக்களிடம் எடுத்து சென்று அவருக்காக உழைத்தோம். அவரை தலைவராக பாடுபட்டோம். ஆனால் கட்சியின் தலைவரான பிறகு அவர் மாறிவிட்டார். கட்சியின் என்னுடையது தான், சின்னமும் என்னுடையது தான் என கூறுகின்றார்.

பென்னாகரம் தொகுதி

தேர்தல் ஆணையத்தில் அதற்கான உரிமையையும் வாங்கிவிட்டார். இந்நிலையில் பென்னாகரம் தொகுதியில் ஜி.கே மணியின் மகனான தமிழ்குமரன் போட்டியிடுகின்றார். கடந்த மாதம் தான் தமிழ்குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு பென்னாகரம் தொகுதியில் சீட் வழங்கப்பட்டுள்ளது. அதே பென்னாகரம் தொகுதி அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பென்னாகரம் தொகுதியில் ஜி.கே மணியின் மகன் வெற்றிபெற கூடாது என்பதனால் அன்புமணியின் மகள்கள் அங்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது அன்புமணி மகள்கள் பேசிய வீடியோ வைரலான நிலையில் அதற்கு ஜி.கே மணி உடனடியாக விளக்கம் கொடுத்திருக்கின்றார். பென்னாகரம் தொகுதியில் அன்புமணியின் மகள்கள் பேசியதை தொடர்ந்து அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான தமிழ்குமரனின் வெற்றிவாய்ப்பு கேள்விக்குறியாகுமா ? அன்புமணியின் மகள்களின் பேச்சு தாக்கத்தை ஏற்படுத்துமா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Source link