சென்னை: சென்னை பெரம்பூரில் வீடுவீடாக ஓட்டு சேகரித்த விஜய், விசில் சின்னத்தை கோலம் போட்ட வீடியோ, புகைப்படம்

சென்னை: சென்னை பெரம்பூரில் வீடுவீடாக ஓட்டு சேகரித்த விஜய், விசில் சின்னத்தை கோலம் போட்ட வீடியோ, புகைப்படம் வெளியாகி உள்ளது.

சென்னையில் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டு பேசிய தவெக தலைவர் விஜய், தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. எனவே, எனது அம்மா, அக்கா, தங்கைகளுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் அவரவர் வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமாக போட்டால் எனக்கு தரும் ஆதரவாக இருக்கும் என்றார்.இதனையடுத்து, தமிழகம் முழுதும் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர், தங்களது வீடுகளில் விசில் சின்னத்தை கோலமாக வரைந்தனர்.

இந்நிலையில் விஜய், இன்று மாலை தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதிக்கு சென்றார். அங்கு வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்த விஜய், விசில் கோலம் போட்டார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த தவெக பணிமனையிலும் வீசில் சின்னத்தை கோலமாக வரைந்தார்.

இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

Source link