விமானத்துக்கு வானில் எரிபொருள் நிரப்ப நிறுவனங்கள் கூட்டு

புதுடில்லி, ராணுவத்திற்காக வானில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பத்தை உள்நாட்டில் தயாரிக்க, இந்தியாவின் பாரஸ் டிபன்ஸ் மற்றும் அமெரிக்காவின் பந்தக் ஏவியேஷன் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.

இந்த அமைப்பு, விமான கண்காணிப்பு மற்றும் போர் சூழல்களில், எரிபொருளுக்காக விமானங்கள் கீழே இறங்காமல் வானிலேயே எரிவாயு நிரப்பவும், இயல்பை விட நீண்ட நேரம் வானில் இருக்கவும் பயன்படுகிறது.

இதை தயாரித்து வழங்குவது மட்டுமன்றி, சரிபார்ப்பு, பராமரிப்பு உள்ளிட்ட இதர சேவைகளையும் வழங்க உள்ளதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பந்தக் நிறுவனம், வானில் எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது.

Source link