சாத்தூர் தொகுதி:`இழுபறியில் நயினார் நாகேந்திரன் தொகுதி’ – விகடனின் மெகா சர்வே ரிப்போர்ட் என்ன? | Sattur Constituency: ‘Nainar Nagendran’s Seat Hangs in the Balance’ – Vikatan’s Mega Survey Report

தொகுதிக்கு 400 பேர் என, 234 தொகுதிகளிலும் 93,600 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இந்த சர்வேயில், மொத்தமாக ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு துணைக் கேள்வியும் இடம்பெற்றது. இந்தக் கேள்விகள் மற்றும் மக்கள் அவற்றுக்கு அளித்த தெளிவான பதில்கள் என மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் இந்த வார ஜூனியர் விடகன் இதழில் வெளியாகியிருக்கிறது.

சாத்தூர் தொகுதி சர்வே முடிவு:

அதன் அடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க-வில் கடற்கரை ராஜ், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், நா.த.க-வில் ஆனந்தராஜா, த.வெ.க-வில் அஜித் போட்டியிடுகிறார்கள். கடற்கரை ராஜின் மனைவி ஒன்றிய சேர்மன் ஆக பணியாற்றியது, கூட்டணிக் கட்சிகள், நாயக்கர் சமூக வாக்குகள் ப்ளஸ்.

உள்கட்சிப் பூசல் மைனஸ். முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து களமிறங்கிய நயினார் நாகேந்திரனுக்கு வெளியூர் விருந்தாளி என்ற முழக்கம் மைனஸ். சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க-வில் இசக்கி ராஜா பிரிக்கும் கணிசமான வாக்குகள் நயினாரை கவலையில் தள்ளுகிறது. இரண்டு பெரிய கட்சிகளுக்குமே உட்கட்சிகளில் இருந்து தேர்தல் பணி செய்ய சிலர் முன்வராததால் இழுபறி நிலவுகிறது.

Source link