மும்பை,
மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) பெற்ற அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங்கை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.
இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை எடுக்க தடுமாறி வந்த அர்ஷ்தீப் சிங், மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அசத்தலாக கம்பேக் கொடுத்தார். அவர் தனது 4 ஓவர்களில் வெறும் 22 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில், அர்ஷ்தீப்பை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில்,
“அர்ஷ்தீப் பயிற்சியை மிகவும் விரும்புபவர். மும்பை போட்டிக்கு முன் கூட அவர் கிட்டத்தட்ட 30 முதல் 40 நிமிடங்கள் வரை இலக்குகளை வைத்து பந்துவீசி தீவிரப் பயிற்சி மேற்கொண்டார். நீங்கள் கடினமாக உழைத்தால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு அந்த போட்டியே சாட்சி” என்றார்.
